·   ·  384 posts
  •  ·  0 friends

இன்றைய ராசி பலன்கள் - 6.10.2025

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

விடாப்படியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். குழந்தைகளின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள். உடலில் ஒரு விதமான அசதிகள் ஏற்பட்டு நீங்கும். நெருக்கடியான சில பிரச்சனைகள் தீர ஆலோசனை கிடைக்கும். உத்தியோகத்தில் விட்டுக் கொடுத்து செயல்படவும். எதிலும் விழிப்புணர்வுடன் இருக்கவும். முயற்சி மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்

ரிஷபம்

பொன் பொருள்கள் சேர்க்கை உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் இருந்த தாமதங்கள் விலகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். கலை துறைகளில் திறமைகள் வெளிப்படும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். கைத்தொழிலில் மேன்மை உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

மிதுனம்

புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தந்தை வழியில் ஒத்துழைப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் சில மாற்றமான தருணங்கள் அமையும். பூர்வீக சொத்துக்களில் அலைச்சல்கள் உண்டாகும். கற்றல் திறனில் மேன்மை ஏற்படும். அறப்பணி விஷயங்களில் தனிப்பட்ட ஆர்வம் உண்டாகும். பக்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

கடகம்

தம்பதிகளுக்குள் இருந்த வேறுபாடுகள் நீங்கும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். உடன் பிறந்தவர்களால் ஆதாயம் ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். வியாபாரம் நிமித்தமான செயல்களின் பொறுமை வேண்டும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான தருணங்கள் அமையும். சக ஊழியர்களிடத்தில் மதிப்புகள் உயரும். ஆரோக்கியம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

சிம்மம்

வேலையாட்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். கணவன், மனைவிக்கிடைய விட்டுக் கொடுத்து செல்லவும். எதிர்பாராத சில விரயங்கள் உண்டாகும். கால்நடை பணிகளில் கவனம் வேண்டும். மனதில் நேர்மறை எண்ணங்களுடன் செயல்படவும். அலுவலகத்தில் அலைச்சல்கள் ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

கன்னி

எதிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள். தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடிவரும். மேல் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். சிக்கல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

துலாம்

உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். அரசியல் விஷயங்களில் ஆதாயம் அடைவீர்கள். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் இழுபறியான பணிகளை முடிப்பீர்கள். புதிய முயற்சிகளில் இருந்த தாமதங்கள் விலகும். நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். பணிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

விருச்சிகம்

மனதில் புதிய சிந்தனைகள் உருவாகும். சிக்கனமாக செயல்பட்டு சேமிப்பை மேம்படுத்துவீர்கள். வியாபார பணிகளில் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். பிரபலமானவர்களின் தொடர்புகள் கிடைக்கும். சிற்றின்ப விஷயங்களில் கவனம் வேண்டும். கலைப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

தனுசு

உடன் பிறந்தவர்கள் பக்கபலமாக செயல்படுவார்கள். பிரபலமானவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வெளிவட்டத்தில் புதிய அனுபவம் உண்டாகும். வியாபார இடமாற்ற எண்ணங்கள் பிறக்கும். சக ஊழியர்கள் ஆதரவால் திட்டமிட்ட காரியம் நிறைவேறும். கல்வியில் இருந்த ஆர்வமின்மை குறையும். அறிமுகம் கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

மகரம்

செயல்களில் இருந்த தாமதங்கள் விலகும். அரசு விஷயங்களில் பொறுமை வேண்டும். புதிய வாகனம் முயற்சிகள் கைக்கூடி வரும். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். பெரியோர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். கவலை மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

கும்பம்

குடும்பத்தில் சிறுசிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். கடன் உதவிகள் கிடைக்கும். நீண்ட நேரம் கண்விழிப்பது தவிர்க்கவும். நண்பர்கள் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். அலுவல் பணிகளில் விவேகம் வேண்டும். இறை வழிபாடு புரிதலை உருவாக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். தெளிவு பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்

மீனம்

உங்கள் மீதான நம்பிக்கையில் சில மாற்றம் ஏற்படும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகங்கள் உண்டாகும். வியாபார விஷயங்களில் விவேகம் வேண்டும். பணி நிமித்தமான ரகசியங்களை பகிராமல் இருக்கவும். எதிலும் நேர்மறையுடன் செயல்படவும். கல்விப் பணிகளில் ஆர்வமின்மையான சூழல் உருவாகும். உற்சாகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

  • 73
  • More
Comments (0)
Login or Join to comment.