·   ·  1147 posts
  •  ·  0 friends

இன்றைய ராசி பலன்கள் - 8.3.2026

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

சுப காரியங்களுக்கான எண்ணங்களில் வெற்றி கிடைக்கும். வணிகம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். மனதளவில் தன்னம்பிக்கை உண்டாகும். உயர் அதிகாரிகளால் ஒத்துழைப்புகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளியூர் பயண வாய்ப்புகள் ஈடேறும். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். பக்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

ரிஷபம்

எந்த ஒரு செயலிலும் பொறுமை கடைபிடிக்கவும். நினைவாற்றலில் இருந்த மந்த தன்மைகள் விலகும். கொடுக்கல் வாங்கலில் புதிய வாய்ப்புகள் உருவாகும். கடன் செயல்களில் சிந்தித்து செயல்படவும். இனம் புரியாத சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் மனதில் உருவாகும். நெருக்கமானவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். அசதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

மிதுனம்

வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வரவுகள் உண்டாகும். மனதை உறுத்திய சில விஷயங்களில் தெளிவான முடிவுகள் உண்டாகும். கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகங்கள் உருவாகும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

கடகம்

புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் மேம்படும். தாய் வழி உறவுகள் மூலம் ஆதாயம் உண்டாகும். கல்வியில் இருந்து வந்த ஆர்வமின்மை குறையும். பலதரப்பட்ட சிந்தனைகள் மூலம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். தாய்மாமன் வழியில் அனுசரித்து செயல்படவும். நேர்மை வெளிப்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

சிம்மம்

பிள்ளைகள் தொழிலில் உதவிகரமாக இருப்பார்கள். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். தன வரவுகள் மூலம் கையிருப்புகள் அதிகரிக்கும். மனதில் நினைத்த காரியங்களை நினைத்த விதத்தில் செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் அனுகூலம் ஏற்படும். மேன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

கன்னி

வாத திறமையினால் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள். சேமிப்புக்கான வரவுகள் மேம்படும். குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவீர்கள். உத்தியோக பணிகளில் துரிதம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். கணிதம் சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்ப்புகள் விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

துலாம்

பெருந்தன்மையான செயல்பாடுகள் மூலம் நன்மதிப்புகள் ஏற்படும். புதுவிதமான ஆடைகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளால் ஒத்துழைப்பான சூழ்நிலைகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். செலவுகளை குறைப்பது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கணவன் மனைவி இடையே அனுசரித்து செல்லவும். அலைச்சல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை

விருச்சிகம்

எண்ணிய பணிகளை செய்து முடிப்பதில் காலதாமதம் உண்டாகும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். வெளியுலக அனுபவம் மூலம் மாற்றங்கள் உருவாகும். சேவை பணிகளில் புதிய ஆதரவுகள் கிடைக்கும். உத்தியோகத்தில் நெருக்கடிகள் அவ்வப்போது தோன்றி மறையும். வர்த்தக பணிகளில் பொறுமை காக்கவும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்

தனுசு

வாழ்க்கை துணையுடன் சிறு தூர பயணம் சென்று வருவீர்கள். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். தந்தை வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உருவாகும். பாகப்பிரிவினைகளில் இருந்து வந்த தாமதம் குறையும். கால்நடை துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இணையம் துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். சகோதரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். யோகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு

மகரம்

பெரியோர்களின் ஆலோசனைகள் மனதில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். உறவினர்களால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். அரசு பணிகளில் உள்ள இழுபறியான சூழல் மறையும். பயணங்களால் புத்துணர்ச்சியான சூழல் உருவாகும். கால்நடை பணிகளில் லாபங்கள் மேம்படும். மாற்றம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மெரூன்

கும்பம்

நண்பர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். வேலையாட்களிடம் சூழ்நிலை அறிந்து செயல்படவும். பிற மொழி மக்களிடம் கவனம் வேண்டும். புதிய முடிவுகளில் விவேகத்துடன் செயல்படவும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். ஆதரவுகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

மீனம்

உறவினர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். சேவை துறைகளில் இருப்பவர்களுக்கு ஆதாயம் மேம்படும். கல்வி பணிகளில் ஆர்வமின்மை உண்டாகும். மற்றவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். விவசாய பணிகளில் கவனம் வேண்டும். பயணங்களால் புத்துணர்ச்சியான சூழல் அமையும். அன்பு வெளிப்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

  • 35
  • More
Comments (0)
Login or Join to comment.