·   ·  1017 posts
  •  ·  0 friends

வாழ்வில் ஏற்றத்தையே தரும் பாதாள செம்பு முருகன் கோவில்

  • தமிழ்நாட்டில் - திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே ராமலிங்கம்பட்டியில் அமைந்துள்ள பாதாள செம்பு முருகன் கோவில், பூமிக்கு அடியில் 16 அடி ஆழத்தில் செம்பு உலோகத்திலான முருகப்பெருமான் வீற்றிருக்கும் ஒரு தனித்துவமான திருத்தலமாகும்.
  • சுமார் 1,000 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படும் இக்கோவில், 18 புனிதப் படிகள் கொண்ட நிலத்தடி குகை அமைப்பில் உள்ளது,
  • இது இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் அமைந்துள்ளது.
  • இந்தக் கோயிலின் முன்புறத்தில் 15 அடியில் பெரிய சங்கிலி கருப்பன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. முருகன் கோயிலில் சங்கிலி கருப்பன் சிலை அமைந்திருப்பது உலகத்திலேயே இங்கு மட்டுமாகத்தான் இருக்கும்.
  • மூலவர்: செம்பு உலோகத்தினால் ஆன முருகன், பாதாளத்தில் வீற்றிருப்பதால் "பாதாள செம்பு முருகன்" என்று அழைக்கப்படுகிறார்.
  • அமைவிடம்: திண்டுக்கல் - பழனி சாலையில், ரெட்டியார்சத்திரம், ராமலிங்கம்பட்டி போக்கர்நகரில் உள்ளது.
  • போகரின் சீடரான திருக்கோவிலார், முருகப்பெருமானுக்கு ஒன்றரை அடி உயரத்தில் ஐந்து உலகக் கலவையான தங்கம், வெள்ளி, செம்பு, ஈயம், இரும்பு ஆகியவற்றை சேர்த்து ஒரு சிலையைச் செய்து இங்கு நிறுவியிருக்கிறார்.
  • இந்த முருகர் சிலைக்கு தினமும் அபிஷேகம் செய்து வருவது உடல் நலத்தை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
  • 18 சித்தர்களின் மூலிகை பிரசாதமான திருநீறு, 7 மாத கால தயாரிப்புக்குப் பின் வழங்கப்படுகிறது.
  • கருங்காலி மாலை மற்றும் வேல் ஆகியவை இங்கு சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
  • தைப்பூசம் மற்றும் கிருத்திகை தினங்களில் அதிக பக்தர்கள் வருகை தருகின்றனர்.
  • பெரும்பாலான முருகன் கோயில்கள் மலையிலேயே அமைந்திருக்கும். ஆனால், இக்கோயிலுக்கு வரும்போது இறக்கமாகவும், போகும்போது ஏற்றமாகவும் இருக்கும். இதனால் இந்தக் கோயிலுக்கு சென்று வழிபடுவதால் வாழ்க்கையில் எப்போதும் ஏற்றமே கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
  • இந்தக் கோயிலுக்குத் தொடர்ந்து ஒன்பது வாரங்கள் சென்று வந்தால் நினைத்தது கைக்கூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
  • பாதாள முருகன் கோயிலில் கருங்காலி மாலையை முருகனின் திருப்பாதங்களில் வைத்து பக்தர்களுக்குப் பிரசாதமாகத் தருகிறார்கள்.
  • கருங்காலி மாலை அணிவதால் செல்வ வளம் கிடைக்கும், ராகு-கேது தோஷம் நீங்கும், குழந்தைப் பேறு வாய்க்கும், மன அழுத்தம் குறையும், இரத்த அழுத்தம் சீராகும்.
  • பதவி உயர்வு மற்றும் மன அமைதிக்காக பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து வழிபடுகின்றனர்.
  • 29
  • More
Comments (0)
Login or Join to comment.