- · 0 friends
இன்றைய ராசி பலன்கள் - 18.11.2026
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்: மற்றவர்களின் ரசனைக்கேற்ப செயல்படுவீர். உறவினர், நண்பர்கள் உங்களை பெருமையாக பார்ப்பர். சொந்த ஊர் நிகழ்ச்சிகளுக்கு முதன்மை தாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்.
ரிஷபம்: நம்பிக்கைக்கு உரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பழைய நண்பர்கள் வீடு தேடி வருவர். வாகனத்தை மாற்றுவீர். வியாபாரம் சூடு பிடித்து லாபம் பார்க்கலாம். உத்தியோகம் சிறக்கும்.
மிதுனம்: புது முயற்சிகளில் ஈடுபடுவீர். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். குலதெய்வப் பிரார்த்தனை நிம்மதி தரும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்ட முயற்சிப்பீர். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு.
கடகம்: பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அலைச்சல், செலவு இருக்கும். சந்திராஷ்டமம் தொடங்குவதால் குடும்ப உறுப்பினர்களிடம் கோபத்தை காட்டாதீர்கள். வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பீர்.
சிம்மம்: நீண்டநாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். குழப்பம் நீங்கி குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். பூர்வீக வீடு விற்பனையாகும். வியாபாரத்தில் பணியாட்கள் ஆதரவு தருவர். அலுவலகத்தில் தேடிய ஆவணம் தென்படும்.
கன்னி: உடன்பிறந்தவர்களால் ஆதாயமுண்டு. முரண்டு பிடித்த பிள்ளைகள் இனி சொல்பேச்சு கேட்பர். பேச்சில் தெளிவு பிறக்கும். தாயாரின் உடல்நலம் நிம்மதி தரும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
துலாம்: மறைமுக எதிர்ப்புகள் விலகும். உங்களின் செயலை பார்த்து மற்றவர்கள் வியப்பர். குடும்பத்தில் நிம்மதி தங்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஆதரவு தருவர். கடையை புது இடத்துக்கு மாற்றுவீர். லாபம் உண்டு. அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும்.
விருச்சிகம்: எதிர்பார்த்தபடி வேலைகள் தடையின்றி முடியும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு வேலை கிடைக்கும். தூக்கமின்மை, மன உளைச்சல் நீங்கும். தாய்வழி உறவினர்கள் உதவி நாடி வருவார்கள். அலுவலகத்தில் நிம்மதியுண்டு. வியாபாரம் சிறக்கும்.
தனுசு: தெளிவாக பேசி சில வேலைகளை முடித்துக் காட்டுவீர். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் கூடும். வங்கியில் வாங்கிய கடனை பைசல் செய்வீர். அலுவலகத்தில் நிம்மதி கிட்டும். உங்கள் மீது இருந்த வீண்பழி நீங்கும். வியாபாரம் சூடு பிடிக்கும்.
மகரம்: உங்களின் அணுகுமுறையை மாற்றி தடைபட்ட வேலையை முடிப்பீர்கள். சகோதரியின் விசேஷத்துக்கு அதிகம் உழைப்பீர். அலுவலகத்தில் உங்களின் திறமை வெளிப்படும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களைக் கவருவீர்.
கும்பம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் முன்கோபம், டென்ஷன் இருக்கும். குடும்பத்தில் அமைதி இருக்கும். அலுவலகத்தில் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிட்டும். பணிச்சுமை கூடும். மேலதிகாரிகள் பாராட்டுவர். வியாபாரத்தில் பாக்கிகளை வசூலிப்பீர்கள்.
மீனம்: குடும்பத்துடன் குலதெய்வம் கோயிலுக்கு சென்று வருவீர்கள். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். வியாபார நெளிவு சுளிவுகளைக் கற்று முன்னேறுவீர். பங்குதாரர்களை பகைத்து கொள்ளாதீர். அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருக்கவும்.