
இன்றைய ராசி பலன்கள் - 5.9.2025
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
மனதில் நினைத்த காரியங்களை முடிப்பீர்கள். உறவினர்களின் சந்திப்புகள் உண்டாகும். வீடு வாகனப் பழுதுகளை சரி செய்தீர்கள். சமூக பணிகளில் உயர் பொறுப்புக்கள் கிடைக்கும். வியாபார இடமாற்றம் குறித்த எண்ணங்கள் மேம்படும். சக ஊழியர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். முயற்சிகளுக்கு உண்டான வெற்றி கிடைக்கும்.புகழ் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
ரிஷபம்
கலை துறைகளில் இருப்பவர்களின் சந்திப்புகள் கிடைக்கும். முதலீடுகள் மூலம் லாபங்கள் அதிகரிக்கும். நீண்ட தூர பயண சிந்தனைகள் உண்டாகும். உத்தியோக ரீதியான பயணங்கள் உண்டாகும். எதிலும் தன்னம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் சாதகமான சூழல் அமையும். தெளிவு பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
மிதுனம்
செயல்களில் இழுபறி உண்டாகும். பயணத்தில் கவனம் வேண்டும். அரசு காரியத்தில் விவேகத்துடன் செயல்படவும். பலதரப்பட்ட சிந்தனைகளால் மனதில் குழப்பம் தோன்றும். எதிர்பார்ப்புகள் அதிக முயற்சிக்குப்பின் நிறைவேறும். செலவுகள் செய்தாலும் திருப்தி ஏற்படாது. உடன் பிறப்புக்களால் அலைச்சல் உண்டாகும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு
கடகம்
வாழ்க்கை துணையின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வர்த்தக தொடர்பான சிந்தனைகள் மேம்படும். இழுபறியாக இருந்த வேலை முடியும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். பொருளாதார நெருக்கடி விலகும். விமர்சன பேச்சுக்கள் மறையும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இள மஞ்சள்
சிம்மம்
எதிலும் உற்சாகமாக செயல்படுவீர்கள். குடும்ப நபர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். உழைப்புக் குண்டான மதிப்புகள் கிடைக்கும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : காவி
கன்னி
செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். நெருக்கமானவர்களிடம் அனுசரித்து செல்லவும். கவின் கலைகள் மீதான ஆர்வம் உண்டாகும். ரசனையில் புதுவிதமான மாற்றம் உண்டாகும். எதிலும் உணர்வுப்பூர்வமாக செயல்படுவீர்கள். மனதில் வித்தியாசமான சிந்தனைகள் உருவாகும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடியான சூழல் உண்டாகும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
துலாம்
அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஆதரவுகள் கிடைக்கும். கடன் சார்ந்த சிந்தனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். உறவினர்களிடத்தில் புரிதல் உண்டாகும். கல்வி தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். திட்டமிட்ட பணிகள் நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும். வியாபாரத்தில் இடமாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
விருச்சிகம்
அதிகார பதவியில் இருப்பவர்களால் ஆதாயம் ஏற்படும். எதிர்பார்த்த சில மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாகன வசதிகள் மேம்படும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். மாறுபட்ட அணுகுமுறைகளால் நினைத்ததை முடிப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். அலைச்சல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
தனுசு
விவசாயம் சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும். உறவினர்களிடத்தில் புரிதல் உண்டாகும். ஆசிரியர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். பேச்சுத் திறமைகள் மூலம் புதிய வாய்ப்புகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான தெளிவுகள் ஏற்படும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். தடைப்பட்ட வரவுகள் கிடைக்கும். பகை விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
மகரம்
நட்பு வட்டம் விரிவடையும். குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். விமர்சன பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. பலதரப்பட்ட சிந்தனைகளால் இறுக்கமான சூழல்கள் உண்டாகும். உதவும் பொழுது சூழ்நிலை அறிந்து செயல்படவும். எதிலும் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை உண்டாகும். ஓய்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
கும்பம்
அரசு பணிகளில் அலைச்சல் ஏற்படும். உயர் அதிகாரிகள் இடத்தில் அனுசரித்து செல்லவும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த தொழிலில் புதிய அனுபவம் கிடைக்கும். ரகசியமான சில செயல்களில் ஆர்வம் ஏற்படும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்
மீனம்
குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டத்தில் மதிப்புகள் உயரும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் ஏற்படும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மேம்படும். உத்தியோகத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும். நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை