இன்றைய ராசி பலன்கள் - 24.12.2025
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
பொது காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். சிந்தனைகளில் இருந்த குழப்பம் விலகும். கால்நடை பணிகளில் கவனம் வேண்டும். பெற்றோர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். வியாபார இடமாற்றம் சார்ந்த சிந்தனை உண்டாகும். உத்தியோகத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். பெருந்தன்மையான செயல்பாடுகளால் ஆதரவுகள் மேம்படும். நற்செய்தி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
ரிஷபம்
உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். உடன் இருப்பவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்து செயல்படவும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். விலகி இருந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபார அபிவிருத்திக்கான சூழல்கள் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பரிசு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
மிதுனம்
நினைத்த காரியம் எண்ணிய விதத்தில் முடியும். ஜாமீன் விஷயங்களில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். வேலைக்கான முயற்சிகள் ஈடேறும். மருத்துவத்துறையில் இருப்பவர்களுக்கு புதிய அனுபவம் உண்டாகும். உறவினர்களால் மதிப்புகள் மேம்படும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
கடகம்
முக்கிய முடிவுகளில் பொறுமை வேண்டும். நினைத்த காரியங்கள் இழுபறியாகி நிறைவு பெரும். பெற்றோருடன் வீண் வாக்குவாதங்கள் வரக்கூடும். பிள்ளைகளின் படிப்பு தொடர்பான அலைச்சல் மேம்படும். மனதளவில் சிறுசிறு குழப்பங்கள் தோன்றி மறையும். எதிலும் விவேகத்துடன் செயல்படவும். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
சிம்மம்
விரும்பிய காரித்தை நினைத்த படியே செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். உத்தியோகத்தில் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். பண விஷயத்தில் கவனம் வேண்டும். பிள்ளைகளால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வேலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
கன்னி
தந்திரமாக செயல்பட்டு நினைத்ததை முடிப்பீர்கள். நண்பர்கள் வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உயர் அதிகாரிகளின் நட்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை வெற்றி கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் முக்கியத்துவம் மேம்படும். எதிர்பாராத சில திடீர் யோகங்கள் உருவாகும். உழைப்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்
துலாம்
வருமானத்தை உயர்த்துவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஆதரவுகள் பெருகும். நண்பர்களின் அறிமுகம் ஏற்படும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். வியாபார தொடர்புகளில் கவனம் வேண்டும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பாராத அலைச்சல்கள் உண்டாகும். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
விருச்சிகம்
குடும்பத்தில் முக்கிய நிகழ்ச்சிகள் நடக்கும். பெரியோர்கள் ஆதரவு கிடைக்கும். தன வரவுகள் தேவைக்கு இருக்கும். அறிமுகம் இல்லாதவர்களிடம் கவனமாக இருக்கவும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். இரவு நேர பயணங்களை தவிர்க்கவும். வியாபாரத்தில் செழிப்பான வாய்ப்புகள் கிடைக்கும். வாழ்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
தனுசு
புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். சுபகாரிய பணிகளை முன்னின்று நடத்துவீர்கள். வாகன வசதி மேம்படும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். சக ஊழியர்கள் இடத்தில் மதிப்புகள் மேம்படும். பாசம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
மகரம்
தம்பதிகளுக்கு மனம் விட்டு பேசுவது நல்லது. பொருளாதாரம் குறித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். புதிய ஆடைகளில் ஆர்வம் ஏற்படும். வியாபாரத்தில் உத்வேகம் ஏற்படும். நவீன மின்னணு சாதனங்களில் கவனம் வேண்டும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். உத்தியோகத்தில் தவறிய சில பொறுப்புகள் மீண்டும் கிடைக்கும். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
கும்பம்
உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். மற்றவர்களின் செயல்களில் தலையிடாமல் இருக்கவும். வியாபாரத்தில் இழுபறியான சூழல் உண்டாகும். எதிலும் பதற்றம் இன்றி செயல்படவும். பலதரப்பட்ட சிந்தனைகளால் ஒரு விதமான சோர்வுகள் உண்டாகும்.சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது சிந்தனைகள் அதிகரிக்கும். ஊடக துறைகளில் புதிய அனுபவம் ஏற்படும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மீனம்
பொறுப்புகளால் உடலில் சோர்வுகள் ஏற்படும். பயனற்ற செலவுகளை குறைப்பீர்கள். வெளி உணவுகளில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் அலைச்சல்களுக்கு பின்பே ஆதாயம் உண்டாகும். எதிலும் பொறுமையோடு செயல்படுவது நல்லது. சக ஊழியர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். மறதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்