·   ·  1117 posts
  •  ·  0 friends

இன்றைய ராசி பலன்கள் - 3.3.2026

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

வேலையாட்களின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். கற்பனை சார்ந்த சிந்தனைகள் மூலம் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் விவேகத்துடன் இருக்கவும். சிறுதொழில் சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். பிள்ளைகளால் ஆதரவான சூழல் உண்டாகும். புதிய இலக்குகளை பற்றிய மாறுபட்ட அணுகுமுறைகள் உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபங்கள் உண்டாகும். தெளிவுகள் பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

ரிஷபம்

விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும். உறவினர்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். கலை பணிகளில் சிந்தித்து செயல்படவும். எதிராக இருந்தவர்களை வெற்றி கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் முக்கியத்துவம் அதிகரிக்கும். வங்கி சார்ந்த துறைகளில் பொறுப்புகள் மேம்படும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

மிதுனம்

எதிலும் மன மகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். புதிய தொழில் நிமித்தமான முயற்சிகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவுகள் கிடைக்கும். விளையாட்டுகளில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். இறை சார்ந்த பணிகளில் ஈடுபாடு ஏற்படும். புதிய தொழில்நுட்ப கருவிகள் வாங்கும் எண்ணம் ஈடேறும். உடல் ஆரோக்கிய இன்னல்கள் குறையும். அனுகூலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

கடகம்

விலகி சென்றவர்கள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். நெருக்கமானவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிந்தனை போக்கில் மாற்றங்கள் உண்டாகும். சுப காரிய தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பயணங்கள் மூலம் புதிய வாய்ப்புகள் ஏற்படும். அலைச்சல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு

சிம்மம்

சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். மற்றவர்களின் செயல்களில் தலையிடுவதை தவிர்க்கவும். வியாபாரத்தில் கனிவான பேச்சுக்கள் வேண்டும். ஆரோக்கிய செயல்களில் விழிப்புணர்வு வேண்டும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். இனம் புரியாத சில சிந்தனைகளால் தயக்கங்கள் ஏற்பட்டு நீங்கும். செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை ஏற்படும். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

கன்னி

பணிகளிலிருந்து வந்த நெருக்கடியான சூழல்கள் குறையும். பிற மொழி பேசும் மக்களின் அறிமுகங்கள் ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். உணவு துறைகளில் திறமைகள் வெளிப்படும். மறைமுகமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் அதிகரிக்கும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

துலாம்

எதிர்காலம் தொடர்பான முயற்சிகளும் முதலீடுகளும் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். பணிபுரியும் இடத்தில் அமைதி உண்டாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுப காரிய எண்ணங்கள் கைகூடும். மனதளவில் சில மாற்றங்கள் ஏற்படும். சேமிப்பு தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு

விருச்சிகம்

கணவன் மனைவி இடையே ஒற்றுமை ஏற்படும். சகோதரர்களால் ஆதாயம் ஏற்படும். வியாபாரப் பணிகளில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். பூர்வீக சொத்துக்களால் லாபம் மேம்படும். தன வரவுகளில் முன்னேற்றம் ஏற்படும். பழைய உறவினர்களின் சந்திப்புகள் உண்டாகும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். எதிர்ப்புகள் குறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

தனுசு

குடும்பத்தில் சிறு வேறுபாடுகள் தோன்றி மறையும். தெய்வீக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். எதிலும் அறிவுபூர்வமாக செயல்படுவீர்கள். ஆடம்பர செலவுகளை படிப்படியாக குறைக்கவும். பேச்சுக்களில் நிதானம் வேண்டும். வியாபார பணிகளில் சிறு சிறு மந்தங்கள் ஏற்பட்டு நீங்கும். தந்தை வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உருவாகும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

மகரம்

எதிலும் கோபம் இன்றி செயல்படவும். வர்த்தக பணிகளில் முதலீடுகளை குறைத்து கொள்ளவும். புதிய கண்ணோட்டம் மூலம் மாற்றமான சூழல் ஏற்படும். திடீர் செலவுகளால் சேமிப்புகள் குறையும். முக்கியமான வேலைகளை மற்றவர்களை எதிர்பார்த்து இருக்காமல் நீங்களே செய்வது நல்லது. செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை ஏற்படும். மறதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

கும்பம்

பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் மேம்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். வாழ்க்கை துணை வழியில் அனுசரித்து செல்லவும். சகோதர வகையில் ஆதரவு ஏற்படும். வரவுகளால் ஆபரண சேர்க்கை உண்டாகும். வர்த்தகப் பணிகளில் லாபம் உண்டாகும். புதியவர்களின் அறிமுகங்களால் உற்சாகம் உண்டாகும். மாற்றம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

மீனம்

கால்நடைகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உடன் இருப்பவர்களை பற்றிய புதிய கண்ணோட்டம் பிறக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சில புரிதல்கள் ஏற்படும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். எண்ணிய சில உதவிகள் சாதகமாக அமையும். செயல்பாடுகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். அசதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

  • 22
  • More
Comments (0)
Login or Join to comment.