·   ·  102 posts
  •  ·  0 friends

தலை முடி உதிராமல் இருக்க.....

உடல் சூடாக இருந்தாலே முடிக் கொட்டும்.

  1. வாரம் ஒரு முறை நல்லெண்ணெயை லேசாக சூடு செய்து நன்றாக ஆறியவுடன் தலையில் தேய்த்துவிட்டு பிறகு குளிக்க வேண்டும். சூடாகவே தேய்தால், தற்சமயம் இருக்கற முடியும் கொட்டிவிடும் வாய்ப்பு அதிகம்.
  2. இரவு தூங்க செல்வதற்கு முன் சுத்தமான தேங்காய் எண்ணெய்யை லேசாக தலையில் தேய்த்துவிட்டு படுக்கலாம்.
  3. தலைக்கு குளித்துவிட்டு ஹேர் ட்ரையர் அல்லது ஃபேன் காற்றில் காயவிடாமல் ஒரு 10 நிமிடம் வெயிலில் நின்றால் முடி கொட்டாது.

கொஞ்சம் பொறுமை தேவைபடும் வழிகள் கீழே :

  1. வெள்ளைப்பூண்டு, இஞ்சி இரண்டையும் நல்லெண்ணெயில் போட்டு அடுப்பில் வைத்து சூடு செய்ய வேண்டும். நுரை பொங்கி வந்தவுடன் அடுப்பை சன்னம் செய்து அணைத்துவிட்டு ஆறியவுடன் தலைக்கு தேய்க்க வேண்டும். இரவில் தேய்த்துவிட்டு மறுநாள் காலையில் தலைக்கு குளிக்க வேண்டும்.
  2. சிறிய வெங்காயத்தை அரைத்து அதன் சாற்றை தடவி சிறிது நேரம் கழித்து குளிக்கலாம்.
  3. வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து தேய்த்துக் குளிக்கலாம்.
  4. கற்றாழையின் (aloe vera) தோலை சீவினால் மஞ்சள் நிறத்தில் ஒரு திரவம் வரும். அதை தடவலாம். அந்த ஜெல்லையும் அரைத்து தேய்த்துவிட்டு சிறிது நேரம் கழித்து குளிக்கலாம்.
  5. வேப்பிலை, மருதாணி, செம்பருத்தி இலைகளை அரைத்து அதன் சாற்றை தேய்த்துவிட்டு பிறகு குளிக்கலாம். செம்பருத்தி இலை சேர்ப்பதால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  6. தினமும் தலைக்கு தேய்க்கும் தேங்காய் எண்ணெய்யில் சிறிது விளக்கெண்ணெய் (Castor oil) சேர்த்துக் கொள்ள வேண்டும். 1/3 அளவு. இரண்டையும் நன்றாக கலந்து தேய்த்தால் முடி கொட்டுவது குறையும்.(விளக்கெண்ணெய் என்றால் விளக்கு ஏற்றும் எண்ணெய் இல்லை. விளக்கெண்ணெய் என்று கடையில் இருக்கும். கொஞ்சம் அடர்த்தி அதிகமாக இருக்கும்)

அதிகமாக தண்ணீர் குடித்தாலே முடிக் கொட்டாது. பொடுகு இருந்தால் முடி கொட்டும். பொடுகு இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

அடிக்கடி ஷாம்பு பயன்படுத்தக் கூடாது. சும்மா கூட வெறும் நீரை தலைக்கு ஊற்றிக் கொள்ளலாம்.

வெந்நீரை தலையில் ஊற்றுவதை முற்றிலும் தவிர்த்து விடுவது மிகவும் நல்லது.

கீரைகள் அதிகமாக சாப்பிட வேண்டும்.(எங்கள் வீட்டில் தினமும் ஒரு கீரையை வைத்து சாவடிப்பார்கள். சாப்ட்டா தான் முடி எல்லாம் கொட்டாது என வசனம் வேறு. உண்மையோ பொய்யோ கீரை சாப்பிடுவது உடலுக்கு நல்லது)

புரதம் அதிகம் உள்ள உணவுகளை உண்ணலாம்.

  • 736
  • More
Comments (0)
Login or Join to comment.