·   ·  265 posts
  •  ·  0 friends

கொஞ்சம் யோசிப்போமே?

  1. ஒரு வேளை புதிதாக ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அவர் பெயர் மறந்து விட்டால், ‘உங்க பெயர் என்ன சொன்னீங்க.. மறந்துட்டேன்‘ என்று சொல்லாமல் ‘உங்கள் முழு பெயர் என்ன?’ என்று கேளுங்கள்.
  2. அப்படி இல்லையென்றால் ‘உங்கள் நம்பரை எந்த பெயரில் போனில் save செய்து கொள்ள?’ என்று கேளுங்கள்.
  3. பேருந்தில் ஊருக்கு செல்லும்போது, உங்கள் பையை உங்கள் சீட்டிற்கு மேலே உள்ள Slab ல் வைக்காமல், எதிரே உள்ள சீட்டின் மேல் உள்ள Slab ல் வையுங்கள். எளிதாக கண்ணில் படும்படி பார்த்துக் கொள்ளலாம். எழுந்திருக்க தேவையில்லை பை இருக்கிறதா? என்று பார்க்க
  4. சிக்னல் இல்லாத இடத்தில் சாலையைக் கடக்க கஷ்டப் படுபவர் என்றால், கடைசி ஆளாக நின்று கொள்ளுங்கள். முதல் ஆளாக நின்று உங்களை நம்பி கடக்க வருபவர்களையும் ஆபத்துக்கு உள்ளாக்க வேண்டாம்
  5. கடையில் ஜூஸ் குடித்தால், இடது கையில் கைப்பிடியை பிடித்தவாறு குடியுங்கள், இதனால் எச்சில் அதிகம் படாத விளிம்பு பகுதியில் பருகலாம்.
  6. யாரவது உணவைப் பகிர்ந்தால், அவர்கள் Box க்குள் உங்கள் Spoon ஐ விடாதீர்கள், உங்கள் Box மூடியில் அவர்களை தட்ட சொல்லுங்கள்.
  7. போனில் ஒரு போட்டோவைப் பார்க்குமாறு யாராவது கையில் குடுத்தால், Swipe செய்து அடுத்த போட்டோவைப் பார்க்காதீர்கள்
  8. அடுத்தவர்கள் வீட்டிற்கு செல்லும்போது சாப்பிட ஏதேனும் கொடுத்தால், கூச்சப் படாமல் வேணும் அல்லது வேண்டாம் என்று சொல்லி விடுங்கள்.குறிப்பாக முழுதாக காலி செய்து விடுங்கள், வாங்கி விட்டு பாதி தட்டோடு போட்டு விட்டு வராதீர்கள்.
  • 1181
  • More
Comments (0)
Login or Join to comment.