·   ·  1145 posts
  •  ·  0 friends

இதெல்லாம் சரிதானே சொல்லுங்கள்.......

  • சட்டையின் முதல் பட்டனைப் போடாதவனை `ஒழுங்கில்லாதவன்’னு சொல்லும் சமூகம், காலர் பட்டனையும் சேர்த்துப் போட்டால், `லூஸு’ எனச் சொல்லிவிடுகிறது.
  • `Sorry’ என்பது மட்டுமல்ல... `சாப்பிட்டியா?’ என்பதும் ஒரு வகையில் சமாதான வார்த்தைதான்!
  • `உன் இஷ்டம்’ என்பது பதிலாக வந்தால் `எனக்கு இஷ்டமில்லை’ என்று பொருள்!
  • கையில் பெப்சி, கோக், லேஸ் வைத்திருந்தால் இயல்பாகப் பார்க்கிறார்கள். ஒரு கொய்யாக்காய் வைத்திருந்தால் விநோதமாகப் பார்க்கிறார்கள். ஐடி பூங்காக்கள்.
  • டிவி-யில் சேனல் மாத்தாம ஒரே சேனலை ரொம்ப நேரம் பார்த்துட்டிருந்தா, ஒண்ணு ரிமோட் சரியில்லாம இருக்கணும்... இல்லை மனசு சரியில்லாம இருக்கணும்.
  • மிடில் க்ளாஸ் வாழ்க்கை எவ்வளவு கஷ்டம்! எதிர்வீட்டுக்காரன் பார்த்தால் பணக்காரனா நடிக்கணும். சொந்தக்காரன் கடன் கேட்டால் ஏழையா நடிக்கணும்.
  • பாகுபலி படத்தில் மட்டும்தான் பொண்டாட்டிகூட சேர்ந்து எதிரியோட சண்டை போடுறான். மத்தவனுக்கெல்லாம் பொண்டாட்டிகூட சண்டை போடவே நேரம் சரியாருக்கு.
  • `உனக்குக் கால் வலிக்கும், நான் தூக்கிக்குறேன்’ என்று சொல்லும்போது வேண்டாம் என்றும், `கை வலிக்குது கொஞ்சம் இறங்கு’ என்று சொல்லும்போது இறங்காததும் குழந்தையின் டிசைன்!
  • நூலகம் செல்வோரை வித்தியாசமாய் பார்க்கிறது சமூகம். குடிப்பவர்களை இயல்பாக பார்க்கிறது.
  • வசதியா இருக்கிறவன் தண்ணி அடிச்சா நல்லா வாழறான்னு சொல்றாங்க. வசதி இல்லாதவன் தண்ணி அடிச்சா கெட்டு ஒளிஞ்சிட்டான் அப்படின்னு சொல்றாங்க
  • 67
  • More
Comments (0)
Login or Join to comment.