இன்றைய ராசி பலன்கள் - 21.9.2025
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
மனதில் இருந்த குழப்பங்கள் விலகும். உயர் கல்வி குறித்த புதிய தேடல் மற்றும் ஆலோசனைகள் கிடைக்கும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். வியாபாரத்திற்கு தேவையான உதவிகள் சாதகமாக அமையும். வாழ்க்கைத் துணைவருடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். உத்தியோக பணிகளில் சில புதுமைகள் மூலம் மற்றவர்களின் கவனத்தை கவருவீர்கள். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சை
ரிஷபம்
பிரபலமானவர்களின் சந்திப்புகள் ஏற்படும். தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தனம் சார்ந்த நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். பயணம் மூலம் புதிய அனுபவங்கள் கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். எதிர்பார்த்த சில விஷயங்கள் தாமதமாகி நிறைவேறும். வியாபாரத்தில் இருந்த மந்ததன்மை குறையும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மிதுனம்
எதிர்பார்த்த பணிகள் தடையின்றி முடியும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். நட்பு வட்டம் விரிவடையும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிவட்டத்தில் விழிப்புணர்வுடன் இருக்கவும். வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் நிதானத்தோடு செயல்படவும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
கடகம்
தனித்து செயல்பட்டு நினைத்ததை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் நலனின் கவனம் செலுத்துவீர்கள். வியாபார நெருக்கடிகள் குறையும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். வாகனம் மாற்ற எண்ணங்கள் கைகூடும். உத்தியோகத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும். ஆக்கப்பூர்வமான நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
சிம்மம்
தடைபட்ட வரவுகள் கிடைக்கும். சில அனுபவங்களால் புதிய அத்தியாயங்களை உருவாக்குவீர்கள். சிக்கலான பணிகளையும் சாமர்த்தியமாக முடிப்பீர்கள். மனதளவில் புதிய நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். எதிர்பாராத சில செய்திகளால் மாற்றம் உண்டாகும். வாக்குறுதிகள் அளிக்கும் பொது சிந்தித்து செயல்படவும். சிக்கல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
கன்னி
மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். எதிலும் திருப்தி அல்லாத சூழல் அமையும். பிடிவாத போக்கினை குறைத்துக் கொள்வது நல்லது. புதிய ஒப்பந்தங்கள் கைகூடிவரும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். துணைவர் இடத்தில் பொறுமை வேண்டும். சுபகாரியம் தொடர்பான அலைச்சல் மேம்படும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
துலாம்
குடும்ப உறுப்பினர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். உணவு சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வாக்குறுதி அளிக்கும் போது சிந்தித்து முடிவெடுக்கவும். தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். செயல்பாடுகளில் சுதந்திரத் தன்மை அதிகரிக்கும். வெளியூர் பயணங்களில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
விருச்சிகம்
வரவுகளில் இருந்த தடைகள் விலகும். உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மற்றவர்களின் முன்னேற்றத்திற்கு உதவியாக இருப்பீர்கள். வீடு மாற்றம் குறித்த செயல்களில் பொறுமை காக்கவும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு உயரும். களிப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
தனுசு
அணுகுமுறைகளில் சில மாற்றம் உண்டாகும். உறவினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நிர்வாக துறைகளில் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சக ஊழியர்கள் இடத்தில் மதிப்புகளில் உண்டாகும். உலக நிகழ்வுகளால் புதிய கண்ணோட்டங்கள் பிறக்கும். நலம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மகரம்
கணவன், மனைவிக்கிடைய புரிதல் உண்டாகும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான தேடல்கள் உண்டாகும். நிர்வாகத்துறையில் அறிமுகம் அதிகரிக்கும். வெளியூர் சார்ந்த பயண வாய்ப்புகள் சாதகமாகும். ஆன்மீக தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வியாபார சார்ந்த சில அனுபவம் மேம்படும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
கும்பம்
செயல்களின் தன்மை அறிந்து செயல்படவும். வியாபாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். எதிலும் விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் சில நெருக்கடிகள் தோன்றி மறையும். நினைத்தது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் நடைபெறும். சகோதரர்கள் வழியில் விட்டுக் கொடுத்து செயல்படவும். சோர்வு விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
மீனம்
பலம் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். சகோதரர்களால் ஆதாயம் ஏற்படும். சுப காரியங்கள் கைகூடி வரும். துணைவர் வழியில் இருந்த வேறுபாடுகள் மறையும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். உயர் அதிகாரிகள் மூலம் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பாசம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு