இன்றைய ராசி பலன்கள் - 3.10.2025
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
வியாபார இடமாற்ற சிந்தனைகள் உருவாகும். கற்றல் திறனில் சில புதுமைகள் ஏற்படும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வுகள் ஏற்படும். உறவுகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். செய்கின்ற முயற்சியில் வித்தியாசமான அனுபவங்கள் கிடைக்கும். அரசு பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். சமூக பணிகளில் தன்னம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
ரிஷபம்
கணவன் மனைவிக்கு இருந்த வேறுபாடுகள் குறையும். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். மனதளவில் தெளிவுகளும் புத்துணர்ச்சியும் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆக்கப்பூர்வமான நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
மிதுனம்
கணவன் மனைவி இடையே அனுசரித்து செல்லவும். வியாபாரம் ரீதியான முயற்சிகளில் விவேகம் வேண்டும். கல்வி கற்கும் திறனில் மாற்றங்கள் ஏற்படும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்து செல்லவும். வர்த்தக பணிகளில் முதலீடுகளை குறைத்து கொள்ளவும். எதிலும் அவசரமின்றி பொறுமையுடன் செயல்படவும். கனிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
கடகம்
உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சவாலான பணிகளையும் சாமர்த்தியமாக முடிப்பீர்கள். துணைவர் வழியில் ஆதாயம் அடைவீர்கள். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடிவரும். வியாபாரத்தில் அறிமுகங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
சிம்மம்
கொடுக்கல் வாங்கலில் முன்னேற்றம் உண்டாகும். வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் உண்டாகும். தேவையற்ற சிந்தனைகளை தவிர்ப்பது மன அமைதியை கொடுக்கும். நெருக்கமானவர்களிடம் இருந்த வேறுபாடுகள் குறையும். பணி நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களில் ஆர்வம் ஏற்படும். பழைய சிக்கல்கள் குறையும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கன்னி
வருமான உயர்வு குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். நண்பர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். அக்கம் பக்கம் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் தொடர்பான பயணங்கள் சாதகமாகும். சக ஊழியர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். புதுமையான விஷயங்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். அனுகூலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
துலாம்
குடும்பத்தில் இருந்த வேறுபாடுகள் விலகும். தொழிலில் அபிவிருத்திக்கான சூழல் அமையும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். ஆரோக்கிய பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். நினைத்த சில உதவிகள் சாதகமாகும். அனுபவம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்
விருச்சிகம்
சொத்து பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.உத்தியோக பணிகளில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். உடன் இருப்பவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். திட்டமிட்ட காரியம் கைகூடி வரும். சிறு தூர பயணங்களால் மனதில் மாற்றம் உண்டாகும். ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
தனுசு
கல்வியில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவுகள் பிறக்கும். சகோதர வகையில் சிறு சிறு சங்கடங்கள் தோன்றி மறையும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றம் உண்டாகும். வியாபார அபிவிருத்திக்கான சூழல்கள் அமையும். கணவன் மனைவி இடையே மனம் விட்டு பேசுவீர்கள். சிரமம் குறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மகரம்
குணநலன்களில் சில மாற்றம் உண்டாகும். பயம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். உணர்ச்சி வேகமின்றி பொறுமையுடன் செயல்படவும். வியாபார பணிகளில் புதுவிதமான யுக்திகளை கையாளுவீர்கள். எண்ணிய சில பணிகளில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். அசதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
கும்பம்
நினைத்த பணிகளில் அலைச்சல் ஏற்படும். திடீர் பயணங்களால் சோர்வுகள் உண்டாகும். ஆடம்பரப் பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். பூர்வீக விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் மத்தியான லாபம் கிடைக்கும். அலுவலகப் பணிகளில் இழுபறி உண்டாகும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிகப்பு
மீனம்
தவறிய சில முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். தேடி வந்தவர்களுக்கு உதவிகளை செய்வீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பணியில் இருந்த தாமதங்கள் விலகும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை