·   ·  45 posts
  •  ·  0 friends

சாட்சி

அந்த ஊர்லயே வயசான ஒரு கிழவியை சாட்சியா விசாரிச்சுக் கிட்டிருக்காங்க...!

வக்கீல் :

"பாட்டி உங்களப் பத்தி சுருக்கமா சொல்லுங்க..."

பாட்டி :

"என்னை பத்தி சொல்ல என்ன இருக்கு?“

“உன்னைப்பத்தி சொல்லவா ?“

“நீ சின்ன வயசுல இந்த ஊர்ல பெரிய களவாணிப் பய. சின்னச் சின்ன திருட்டெல்லாம் பண்ணி தப்பிச்சிகிட்டே...“,

“அப்புறம் ஒருநாள் நம்ம ஊரு கோயில் உண்டியலை உடைச்சு நகை, பணம் எல்லாம் திருடிட்டே.“.

“ஊர் மக்கள் கிட்ட மாட்டாம உன்ன உங்க அப்பன் வெளியூருக்கு கூட்டிகிட்டு போய் படிக்க வச்சான். இன்னிக்கு நீ வக்கீலா இங்க வந்து நிக்கற..."

அதிர்ந்து போனார் வக்கீல். மெல்ல சமாளிச்சிகிட்டு,

"சரி பாட்டி.. இந்த எதிர் தரப்பு வக்கீலை உங்களுக்கு தெரியுமா ?" ன்னு கேட்டார்.

பாட்டி : "தெரியுமாவா; இந்த மொள்ளமாரி சின்ன வயசுல, ஊர் பொண்ணுங்க ஒண்ணைக்கூட விட்டு வைக்க மாட்டான்.“

“சரியான பொம்பளை பொறுக்கி, பஞ்சாயத்து இவனை ஊர விட்டு ஒதுக்கி வச்சுருச்சு...“

“இப்போ என்னமோ, கோட்டு போட்டுக்கிட்டு வந்து நிக்கிறான் !"

ஜட்ஜ் : (மேஜையை தட்டி)

"அரை மணி நேரம் கழித்து கோர்ட் மீண்டும் கூடும்" ன்னு உத்தர விட்டுட்டு வக்கீல்கள் இருவரையும் தன் அறைக்கு அழைத்தார்.

அறைக்குள் நுழைந்த அந்த இரு வக்கீல்களிடமும் ஜட்ஜ் பின் வருமாறு கூறினார் :

"கோர்ட் மறுபடியும் தொடங்கிய தும் நீங்க ரெண்டு பேரும் 'இந்த ஜட்ஜ் ஐயாவை தெரியுமா?' ன்னு அந்தக் கிழவிகிட்ட கேட்டீங்கன்னா செருப்பு பிஞ்சுடும், ஜாக்கிரதை !!"

  • 199
  • More
Comments (0)
Login or Join to comment.