
இன்றைய ராசி பலன்கள் - 6.9.2025
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
தந்தை வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். உயர்கல்வி தொடர்பான செயல்களில் தெளிவுகள் பிறக்கும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். வர்த்தக பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
ரிஷபம்
சில அனுபவம் மூலம் புதிய கண்ணோட்டம் பிறக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சேமிப்பு தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சிந்தனைகளின் தெளிவுகள் பிறக்கும். புதிய தொழில் சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
மிதுனம்
கணவன் மனைவிக்குள் இருந்த வேறுபாடுகள் விலகும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். தவறிய சில முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபார விஷயங்களில் திருப்பங்கள் ஏற்படும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
கடகம்
நண்பர்களிடத்தில் வாதங்களை தவிர்க்கவும். நீண்ட நேரம் கண்விழிப்பது தவிர்க்கவும். உடன் இருப்பவர்களிடம் வளைந்து கொடுத்து செல்வது நல்லது. நினைத்த சில பணிகளில் தாமதம் உண்டாகும். வரவேண்டிய வரவுகள் தாமதமாக கிடைக்கும். எதிர்பாராத சில பொறுப்புகளால் மாற்றம் ஏற்படும். அலைச்சல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
சிம்மம்
மனதளவில் புதிய உற்சாகம் பிறக்கும். சகோதரர்கள் வழியில் இருந்த வேறுபாடுகள் மறையும். நுட்பமான பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள். உறவுகள் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். சுப காரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும். போட்டி தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். களிப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கன்னி
சுறுசுறுப்பாக செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். உடல்நிலையில் தோன்றிய சங்கடம் நீங்கும். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். மனதில் இருந்த கவலைகள் மறையும். எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். நினைத்த பணிகளில் சாதகமான நிலை உண்டாகும். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
துலாம்
பயணம் சார்ந்த எண்ணங்கள் ஈடேறும். பழைய நினைவுகளால் மகிழ்ச்சி ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் விஷயத்தில் விவேகத்துடன் செயல்படவும். தோற்ற பொழிவு பற்றிய சிந்தனைகள் மேம்படும். கால்நடைகளால் ஆதாயம் உண்டாகும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் விலகும். ஆர்வம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
விருச்சிகம்
வியாபாரத்தில் இடமாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடன் இருப்பவர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை உருவாக்கும். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். சுரங்க பணிகளில் சாதகமான சூழல் அமையும். அரசு தொடர்பான செயல்களில் அனுகூலம் ஏற்படும். கனிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
தனுசு
உயர் அதிகாரிகளின் அறிமுகம் ஏற்படும். விருப்பமான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். செய்யும் முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். சமூக பணிகளில் புதிய வாய்ப்புகள் ஏற்படும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பொழுது போக்கு செயல்களால் ஆதாயம் அடைவீர்கள். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மகரம்
கணவன் மனைவிக்கிடையே இருந்த வேறுபாடுகள் மறையும். கேட்ட சில உதவிகள் சாதகமாகும். தெய்வீக பணிகளில் ஈடுபாடு ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். வியாபார பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உயர் அதிகாரிகள் மத்தியில் மதிப்புகள் உயரும். எதிர்பாராத சில மாற்றங்கள் உருவாகும். அனுகூலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
கும்பம்
திட்டமிட்ட பணிகள் நிறைவேறும். அக்கம் பக்கம் இருப்பவர்கள் ஆதரவுகள் கிடைக்கும். வியாபாரம் நிமித்தமான புதிய ஆலோசனைகள் கிடைக்கும். பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். கொள்கை பிடிப்பு குணம் அதிகரிக்கும். இனம் புரியாத சில கனவுகள் மூலம் அமைதியின்மை உண்டாகும். புகழ் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
மீனம்
கனிவான பேச்சுகள் நன்மையை ஏற்படுத்தும். வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் உண்டாகும். பொன் பொருள்கள் மீது ஆர்வம் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். ஆரோக்கிய செயல்களில் சற்று கவனத்துடன் செயல்படவும். எதிர்பாராத சில செலவுகள் இருந்தாலும் சமாளிப்பதற்கான சூழல் அமையும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்