·   ·  1687 posts
  •  ·  0 friends

இன்றைய ராசி பலன்கள் - 19.7.2026

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்: திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கூடும். வியாபாரம் சூடு பிடித்து லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

ரிஷபம்: பேச்சில் கம்பீரம் பிறக்கும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தாயாரின் மருத்துவச் செலவு குறையும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும்.

மிதுனம்: வெளிவட்டாரத் தொடர்பால் சில பணிகளை முடிப்பீர். குடும்பத்தாருடன் மனம் விட்டுப் பேசுவீர். ஆன்மிகத்தில் ஈடுபாடு கூடும். பயணங்களால் ஆதாயம் உண்டு. அலுவலகத்தில் அமைதி காப்பீர். வியாபாரம் சிறக்கும். பங்குதாரர்களின் ஆலோசனையை ஏற்கவும்.

கடகம்: முகப் பொலிவுடன் காணப்படுவீர். முடியாமல் போன காரியங்களை முடிப்பீர். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் சந்தோஷம் நிலைக்கும். அக்கம் பக்கத்தினரின் ஆதரவு கிட்டும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும். வியாபாரம் லாபம் தரும்.

சிம்​மம்: தம்பதிக்குள் விட்டுக் கொடுத்து போகவும். வெளிவட்டாரத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். பழைய கடனைத் தீர்க்க முயற்சிப்பீர். புது வழி கிட்டும். வியாபாரரீதியான வெளியூர் பயணங்கள் திருப்தி தரும். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்.

கன்னி: திட்டமிட்டபடி பணிகளை முடிக்க முடியாமல் திணருவீர்கள். உடல்நலக் குறைவு, மனச்சோர்வு வரும். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு பழைய வாடிக்கையாளர்களைக் கவருவீர். ஓரளவு லாபம் உண்டு. உத்தியோகம் சிறக்கும்.

துலாம்: மனநிறைவுடன் காணப்படுவீர். குடும்பத்தில் அனுசரித்துப் போவீர். பிள்ளைகளிடமிருந்த மனக்கசப்பு விலகும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும். வியாபாரத்தில் பங்குதாரரின் ஆலோசனையை ஏற்கவும்.

விருச்​சிகம்: மறைமுக போட்டிகளுக்கு பதிலடி தருவீர். யோகா, ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அக்கம் பக்கத்தினரை பகைத்துக் கொள்ளாதீர். வியாபாரத்தில் லாபம் உண்டு. பயணங்கள் திருப்திகரமாக இருக்கும். அலுவலகரீதியான பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.

தனுசு: பிள்ளைகளின் விருப்பங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர். சகோதர, சகோதரிகளால் நன்மையுண்டு. தள்ளிப்போய் கொண்டிருந்த சுபகாரியம் கைகூடிவரும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

மகரம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவதன் மூலம் காரியங்கள் வெற்றியடையும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வீடு வந்து சேரும். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.

கும்​பம்: குடும்பத்தினரால் விரயச் செலவுகள் இருக்கும். நண்பர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. வியாபாரத்தில் முக்கிய முடிவு எடுப்பதில் அவசரம் காட்டாதீர். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

மீனம்: தடைபட்டிருந்த காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் நல்ல தீர்வு காண்பீர். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.

  • 190
  • More
Comments (0)
Login or Join to comment.