·   ·  601 posts
  •  ·  0 friends

இன்றைய ராசி பலன்கள் -18.11.2025

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். திட்டமிட்ட காரியம் கைக்கூடி வரும். ஆன்மீகப் பணிகளில் தெளிவு ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

 

ரிஷபம்

முக்கியமான விஷயங்களை பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். அதிகார பொறுப்புகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய வியூகங்களை கையாளுவீர்கள். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

 

மிதுனம்

பழைய நண்பர்களின் சந்திப்புகள் உண்டாகும். உத்தியோக பணிகளில் திறமைகள் வெளிப்படும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றம் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். இறை வழிபாடுகளால் நன்மைகள் உண்டாகும். உடன் இருப்பவர்களால் சில முடிவுகளை எடுப்பீர்கள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

 

கடகம்

குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும். திடீர் செலவுகளால் கையிருப்புகள் குறையும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். நண்பர்கள் மத்தியில் மரியாதை கூடும். பகைமை உணர்வுகளை குறைத்துக் கொள்வது நல்லது. குழந்தைகள் வழியில் அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

 

சிம்மம்

பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன் பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். அரசு விஷயங்களில் கவனம் வேண்டும். வெளிவட்டத்தில் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். உயர் அதிகாரிகளிடத்தில் பொறுமை வேண்டும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

 

கன்னி

மனதளவில் இருந்த குழப்பங்கள் நீங்கும். கல்விப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் பொறுமை வேண்டும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். மேல் அதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். பெருந்தன்மையான செயல்பாடுகளால் மதிப்புகள் உயரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

 

துலாம்

சூழ்நிலை அறிந்த கருத்துக்களை வெளிப்படுத்தவும். சிந்தனைகளில் ஒரு விதமான தடுமாற்றம் ஏற்படும். வரவுகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். தம்பதிகளுக்குள் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். வேலையாட்களால் அலைச்சல்கள் ஏற்படும். சக ஊழியர்களிடத்தில் பொறுமை வேண்டும்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

 

விருச்சிகம்

கணவன் மனைவிக்கு இடையே சிறுசிறு வாதங்கள் ஏற்பட்டு நீங்கும். ஜாமின் விஷயங்களை தவிர்க்கவும். வெளி உணவுகளில் கவனம் வேண்டும். கடின உழைப்பிற்கான பலன்கள் கைகூடும். சக ஊழியர்கள் இடத்தில் விவாதங்கள் தவிர்க்கவும். ரகசியமான முதலீடுகள் அதிகரிக்கும். மற்றவர்களால் பொறுப்புகள் மேம்படும்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

தனுசு

கொடுக்கல் வாங்கலில் கவனத்துடன் இருக்கவும். கணவன் மனைவிக்கு இடையே புரிதல் ஏற்படும். திடீர் பணவரவுகள் உண்டாகும். உத்தியோகத்தில் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். சிந்தனைப் போக்கில் தெளிவுகள் ஏற்படும். அணுகு முறையில் சில மாற்றம் ஏற்படும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கடன் பிரச்சனைகள் குறையும்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

மகரம்

சவாலான பணிகளை செய்து முடிப்பீர்கள். பிரபலமானவர்களின் சந்திப்புகள் ஏற்படும். உறவுகள் வழியில் ஆதாயம் ஏற்படும். அரசு காரியங்களில் இருந்த தாமதங்கள் விலகும். வியாபாரத்தில் புதுவிதமான சூழல்கள் உருவாகும். பணி சார்ந்த முயற்சிகள் பலிதமாகும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

கும்பம்

திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். உறவுகள் வழியில் சுப செய்திகள் கிடைக்கும். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகங்கள் ஏற்படும். கால்நடை பணிகளில் ஆதாயம் மேம்படும். வியாபார பயணங்களில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சிந்தனைகளில் இருந்த குழப்பம் விலகும்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு

 

மீனம்

செயல்களின் தன்மைகளை அறிந்து செயல்படவும். குழந்தைகளிடத்தில் விட்டுக் கொடுத்து செயல்படவும். சந்தேக உணர்வுகளை தவிர்க்கவும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். மற்றவர்கள் செயல்களை தலையிடுவதை தவிர்க்கவும். உத்தியோகத்தில் விவேகத்துடன் செயல்படுவது நல்லது.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

  • 161
  • More
Comments (0)
Login or Join to comment.