·   ·  2049 posts
  •  ·  0 friends

தத்துவமும் எதார்த்தமும்!

ஒரு ஊரில் ஒரு குருவும் சீடனும் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு பெரிய பள்ளத்தில் மாடு ஒன்று விழுந்து தவித்துக்கொண்டிருந்தது.

​அதைப் பார்த்த சீடன், "ஐயோ, மாடு மாட்டிக்கிச்சு! யாராவது வந்து இதைக் காப்பாத்தக் கூடாதா?" என்று கவலைப்பட்டான்.

​உடனே குரு ரொம்ப அமைதியாக, "இதற்கெல்லாம் ஏன் கவலைப்படுகிறாய்? உலகில் எது நடந்தாலும் அது நன்மைக்கே. மாட்டின் தலைவிதி அப்படி இருந்திருக்கிறது, அதுதான் நடந்துள்ளது. நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைத்துச் செல்!" என்று தத்துவம் பேசிவிட்டு நகர்ந்தார்.

​சிறிது தூரம் கடந்ததும், குருவும் சீடனும் ஒரு சேறும் சகதியுமான வழியைக் கடக்க வேண்டியிருந்தது. அப்போது குரு எதிர்பாராமல் கால் சரிந்து, அசல் சேற்றில் கவிழ்ந்து விழுந்தார். அவர் அணிந்திருந்த ஆடை முழுவதும் சேறு பட்டு அசிங்கமாகிவிட்டது.

​உடனே சீடன் ஓடிவந்து, குருவிடம் நமுட்டுச் சிரிப்புடன் சொன்னான், "குருவே... நீங்கள் சற்று முன்புதானே சொன்னீர்கள், 'நடப்பதெல்லாம் நன்மைக்கே, மாட்டின் தலைவிதி' என்று. இப்போது உங்கள் ஆடை சேற்றில் விழுந்ததும் அதே விதிதானே? கவலைப்படாதீர்கள், சிரித்துக்கொண்டே இருங்கள்!"

​குரு கோபத்துடன் தன் சேற்றைத் தட்டியபடியே, "டேய்! மாடு விழுந்தால் அது தத்துவம்... நான் விழுந்தால் அது எனக்குப் பெரும் அவமானம்! சும்மா வாயை மூடு!" என்று கத்தினாராம்.

மற்றவர்களுக்குப் பிரச்சனை வரும்போது பெரிய தத்துவங்களைச் சொல்வது எளிது; ஆனால் அதே பிரச்சனை நமக்கே வரும்போதுதான் அந்த வலியும் கோபமும் என்னவென்று புரியும்!

  • 32
  • More
Comments (0)
Login or Join to comment.