
விதியையும் மாற்றும்அதிசயக் கோவில்
- பொதுவாக, அனைத்துக் கோயில்களும் அதிகாலையில் நடை திறந்து இரவில் நடை சாத்தப்படுவது வழக்கம். ஆனால், மதுரையில் உள்ள ஒரு கோயில் இரவில் மட்டுமே திறந்திருக்கும் என்பது அதிசயமான உண்மை
- காலதேவி அம்மன் கோயில் சூரியன் மறைந்ததும் திறக்கப்பட்டு, மறுநாள் சூரிய உதயத்திற்கு முன்பு நடை சாத்தப்படுகிறது.
- இந்தக் கோயில் மதுரை மாவட்டம் சுப்புலாபுரம் அருகில் உள்ள சிலார்பட்டி என்ற கிராமத்தில் உள்ளது. உலகிலேயே இரவு முழுவதும் திறந்திருக்கும் ஒரு கோயில் என்றால் அது இதுதான்.
- இந்தக் கோயிலில் பௌர்ணமி, அமாவாசை நாட்களில் கூட்டம் மிகுதியாக இருக்கும். இந்தக் கோயிலில் 27 நட்சத்திரங்கள் 9 நவகிரகங்கள் மற்றும் 12 ராசிகளை தன்னுள் அடக்கி வைத்திருக்கிறார் இந்த கோயிலின் மூலவர் தெய்வமான கால தேவி அம்மன்.
- கோயில் கோபுரத்திலேயே 'நேரமே உலகம்' என்று பொறிக்கப்பட்டிருக்கின்றது.
- புராணங்களில் காணக்கூடிய காலராத்திரியைத்தான் இந்தக் கோயிலில் கால தேவியாக வழிபடுகின்றனர்.
- அவருடைய இயக்கத்தில்தான் 14 லோகங்களும் பஞ்சபூதங்களும் நட்சத்திரங்களும் கிரகங்களும் செயல்படுகின்றன என்று நம்புகின்றனர் மக்கள்.
- இந்தக் கோயிலின் கருவறையும் விமானமும் எண் கோண வடிவில் அமைக்கப்பட்டுள்ளன.
- இந்த கால தேவி அம்மன் கோயிலில் வந்து வழிபாடு செய்தால் கெட்ட நேரமும் நல்ல நேரமாக மாறும் என்பது மக்களின் நம்பிக்கை.
- கோயிலை தலா 11 சுற்றுகள் வலமிருந்து இடமாகவும், இடமிருந்து வலமாகவும் சுற்றி வந்து, காலச்சக்கரத்தின் முன் அமர்ந்து 11 வினாடிகள் தரிசித்தால் போதும். கெட்ட நேரம் அகன்று, நல்ல நேரம் வரும் என்பது மக்களின் தீராத நம்பிக்கை.
- இங்கு வரும் பக்தர்கள், தனக்கு இதைக் கொடு, அதைகோடு என வேண்டுவதற்கு பதிலாக, காலதேவியிடம் ‘எனக்கு எது நல்லதோ அதைக் கொடு, நல்ல நேரத்தைக் கொடு’ என வேண்டினாலே போதும்.
- அதே போல் கோரிக்கை நிறைவேற 3 பெளர்ணமி, 3 அமாவாசை கோயிலுக்கு சென்று காலதேவியை வணங்கினால் பில்லி, சூனியம், ஏவல், தீராத வியாதிகள் என அனைத்து பிரச்னைகளும் தீரும்.