- · 0 friends
இன்றைய ராசி பலன்கள் - 31.8.2026
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்: இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். பெற்றோர் உடல் நலம் சீராகும். அரசு, வங்கி சம்பந்தப்பட்ட காரியங்கள் சாதகமாக முடியும். தொழில், வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். சரக்குகள் விற்றுத் தீரும்.
ரிஷபம்: உங்கள் மனம் விரும்பிய புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பண வரவு உண்டு. கணவன் - மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். வியாபாரம் லாபம் தரும். பேச்சில் நிதானம் தேவை.
மிதுனம்: உங்களது எதார்த்தமான, சாதுர்யமான பேச்சால், தடை பட்ட காரியங்களை முடிப்பீர்கள். குடும்பத்தினரின் ஆதரவு பெருகும். பிள்ளைகள் உடல்நலம் சீராகும். வியாபாரத்தில் பணியாளர்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள்.
கடகம்: புதியவர்களுடன் நட்பு மலரும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். கொடுக்கல் - வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். வாகனப் பழுது நீங்கும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும்.
சிம்மம்: மனதில் இருந்த அச்சம், கவலைகள் நீங்கி, நம்பிக்கையும், உற்சாகமும் பிறக்கும். கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் நீங்கி, அன்யோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்று காசாக்குவீர்கள். அலுவலகத்தில் நிம்மதி உண்டு.
கன்னி: யாருக்கும் ஜாமீன் தருவது, சாட்சிக் கையெழுத்திடுவது, வேலைக்கு சிபாரிசு செய்வது வேண்டாம். பழைய பிரச்சினைகளுக்கு சுமுக தீர்வு காண்பீர்கள். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். ஆன்மிகம், தியானத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.
துலாம்: புதியவர்களின் நட்பு கிடைக்கும். தள்ளிப்போன வழக்கில் சாதகமான திருப்பம் வரும். அரசு, வங்கி காரியங்கள் விரைந்து முடியும். புதியவர்களின் அறிமுகமும், அதனால் அனுகூலமும் கிடைக்கும். பல வகையிலும் பொருட்கள் சேரும்.
விருச்சிகம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். புதிய பதவிகள், பொறுப்புகள் தேடிவரும். உறவினர்கள், நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
தனுசு: முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பிள்ளைகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். தொழில், வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் வேலைச் சுமை குறையும்.
மகரம்: எதிர்மறை எண்ணங்கள் மறையும். முகத்தில் தெளிவு பிறக்கும். கையில் காசு பணம் புரளும். நண்பர்கள் வருகையால் வீடு களைகட்டும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். குலதெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறும்.
கும்பம்: பண வரவால் பழைய கடனை அடைப்பீர்கள். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். பிள்ளைகள் உடல்நலம் சீராகும். வாகனச் செலவு குறையும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். நாடி வந்தவர்களுக்கு உதவுவீர்கள்.
மீனம்: வீண் பிரச்சினைகளில் சிக்காமல் இருங்கள். பழைய கசப்பான சம்பவங்கள் பற்றி யாரிடமும் பேச வேண்டாம். வியாபாரத்தில் லாபம் உண்டு. ஆன்மிகம், யோகாவில் நாட்டம் ஏற்படும். வீட்டு உபயோகப் பொருட்கள், மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள்.