·   ·  780 posts
  •  ·  0 friends

இன்றைய ராசி பலன்கள் - 27.12.2025

மேஷம்

குடும்பத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் உழைப்புகள் அதிகரிக்கும். சக ஊழியர்களால் அமைதி இன்மை ஏற்படும். நினைத்த சில பணிகளில் தாமதம் உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

ரிஷபம்

மனதில் நினைத்த காரியம் கைகூடும். பெற்றோர் இடத்தில் ஆதரவுகள் மேம்படும். வெளிவட்டத்தில் செல்வாக்கு உயரும். புதிய பொறுப்புகள் பதவிகள் கிடைக்கும். வீடு விற்பனையில் கவனம் வேண்டும். வியாபார இடமாற்றம் சார்ந்த எண்ணங்கள் உருவாகும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். ஆக்கபூரவமான நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்

 

மிதுனம்

கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். வியாபாரத்தில் புதுமையான சிந்தனைகள் ஏற்படும். பொருளாதார ரீதியில் முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். சுப காரியங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

 

கடகம்

உறவினர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மனதில் புதுவிதமான தேடல்கள் உருவாகும். வர்த்தக பணிகளில் சிந்தித்து செயல்படவும். காப்பீடு வகைளில் ஆதாயம் ஏற்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

சிம்மம்

இனம் புரியாத சில சிந்தனைகளால் குழப்பங்கள் உண்டாகும். பயணம் மூலம் அலைச்சலும் சோர்வும் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பொழுது போக்கு சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். மற்றவர்கள் செயல்களில் தலையிடாமல் இருக்கவும். எதிலும் பொறுமை வேண்டும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்

 

கன்னி

சவாலான செயல்களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதரர்கள் வழியில் ஒற்றுமை ஏற்படும். வெளிவட்டத்தில் புதிய அனுபவம் ஏற்படும். எதிர்பார்த்த இடமாற்றம் சாதகமாகும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும். மனதளவில் புத்துணர்ச்சி உண்டாகும். உதவி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு

 

துலாம்

குடும்பத்தில் மதிப்புகள் மேம்படும். உயர் அதிகாரிகளின் நட்புகள் கிடைக்கும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். நெருக்கமானவர்களுக்காக சில பணிகளை மேற்கொள்வீர்கள். கடன் பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். திட்டமிட்ட காரியங்கள் கைகூடி வரும். மனதளவில் இருந்த சஞ்சலங்கள் விலகும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

விருச்சிகம்

புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். உறவுகளால் ஏற்பட்ட நெருக்கடிகள் குறையும். ஆடம்பரமான செலவுகளை குறைத்து சேமிப்பை பயன்படுத்துவீர்கள். ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் உண்டாகும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஈடுபாடு ஏற்படும். உத்தியோகத்தில் விவேகத்துடன் செயல்படவும். சினம் குறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

 

தனுசு

நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்புகள் உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான விரயங்கள் ஏற்படும். சில விஷயங்களை போராடி மேற்கொள்வீர்கள். கலைப் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் சில மாற்றங்களால் ஆதாயம் அடைவீர்கள். உத்தியோகத்தில் சாதகமான சூழல் உண்டாகும். எதிலும் உழைப்புகள் அதிகரிக்கும். உழைப்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிகப்பு

 

மகரம்

மனதளவில் புதிய தைரியம் உருவாகும். சுபகாரியங்களுக்கான எண்ணங்கள் கைகூடும். புதிய பொருள் சேர்க்கை ஏற்படும். புதிய துறை சார்ந்த தேடல்கள் மேம்படும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். சக ஊழியங்கள் ஆதரவாக இருப்பார்கள். முயற்சி மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

 

கும்பம்

கணவன் மனைவிக்கு இடையே மனம் விட்டு பேசுவதால் புரிதல் உண்டாகும். தள்ளிப்போன சில வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மதிப்புகள் மேம்படும். தனம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். வெற்றி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு

 

மீனம்

எந்த செயலிலும் பொறுமையுடன் செயல்படவும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். பழைய நிகழ்வுகளைப் பற்றி விவாதிக்க வேண்டாம். வாடிக்கையாளர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். அலுவலக ரகசியங்களில் கவனத்துடன் இருக்கவும். வாழ்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

  • 32
  • More
Comments (0)
Login or Join to comment.