- · 0 friends
இன்றைய ராசி பலன்கள் - 9.4.2026
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை பிறக்கும். பேச்சுகளில் பொறுமை வேண்டும். இழுபறியான சில வேலைகள் முடிவு பெறும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருள்களில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். அலுவலகத்தில் உழைப்பிற்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
ரிஷபம்
எதிலும் திட்டமிட்டு செயல்படவும். வியாபாரத்தில் அலைச்சல்கள் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். விளையாட்டான பேச்சுகளை தவிர்க்கவும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருக்கவும். பல பணிகளை செய்ய வேண்டிய சூழல் ஏற்படும். செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
மிதுனம்
சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். பயணம் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களில் ஆர்வம் உண்டாகும். உறவுகள் வழியில் அனுகூலமான செய்திகள் கிடைக்கும். சுப காரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடி வரும். வியாபாரத்தில் சில தந்திரங்களை புரிந்து கொள்வீர்கள். முயற்சிக்கான பாராட்டுகள் கிடைக்கும். நலம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
கடகம்
சக ஊழியர்களிடம் ஒற்றுமை உண்டாகும். வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கல்வி தொடர்பான பணிகளில் மாற்றங்கள் உருவாகும். வாக்குறுதிகள் கொடுக்கும் போது சிந்தித்து செயல்படவும். வாகனப் பழுதை சீர் செய்வீர்கள். விவசாய பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் காணப்படும். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
சிம்மம்
கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உயர்கல்வி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். நிர்வாகத்துறையில் திறமைகள் வெளிப்படும். வியாபாரத்தை விரிவு செய்வது சார்ந்த எண்ணம் உண்டாகும். பயனற்ற செலவுகளை குறைப்பீர்கள். பிற மொழி மக்களின் உதவிகள் கிடைக்கும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
கன்னி
நண்பர்களின் ஆலோசனைகள் மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவுகள் கிடைக்கும். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகை ஏற்படும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். கூட்டாளிகள் வழியில் அனுசரித்து செல்லவும். ஆர்வம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
துலாம்
எதிர்பாராத சில காரியங்கள் நிறைவேறும். நண்பர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். வியாபார பயணங்களில் அனுகூலம் ஏற்படும். மறைமுகமான போட்டிகளை சமாளிப்பீர்கள். அலுவலகத்தில் அமைதியான சூழல் நிலவும். கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். களிப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
விருச்சிகம்
ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்வாதங்களில் சிந்தித்து செயல்படவும். நண்பர்கள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தாய்மாமன் வழியில் ஆதரவுகள் கிடைக்கும். கடன் செயல்களில் தெளிவுகள் உண்டாகும். தூக்கமின்மை பிரச்சனைகள் குறையும். புதிய உணவுகளில் கவனம் வேண்டும். சிக்கல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை
தனுசு
சுப காரிய எண்ணங்கள் ஈடேறும். தோற்றப்பொலிவில் மாற்றங்கள் காணப்படும். எண்ணிய சில பணிகள் நிறைவேறுவதில் அலைச்சலும் அனுபவமும் ஏற்படும். படிப்பில் ஆர்வமின்மை வெளிப்படும். மனதளவில் சில முடிவுகளை எடுப்பீர்கள். குடும்ப விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். எதிர்கால முதலீடுகளில் கவனம் வேண்டும். எதிர்ப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு
மகரம்
உணவு தொடர்பான துறைகளில் திறமைகள் வெளிப்படும். ரகசியமான சில ஆராய்ச்சிகள் மீது ஆர்வம் ஏற்படும். சிகை அலங்காரப் பணிகளில் ஒருவித ஈர்ப்பு ஏற்படும். உபரி வருமானம் சார்ந்த வருமான சிந்தனைகள் மேம்படும். அறிமுகம் இல்லாத புதிய சூழலில் இருப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். பணிமாற்றம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். சிந்தனை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்
கும்பம்
வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடுகள் உண்டாகும். மருத்துவ துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். அரசு செயல்களில் இருந்த தாமதம் விலகும். காப்பீடு துறைகளில் உள்ளவர்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். எதிலும் விழிப்புணர்வுடன் இருக்கவும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மீனம்
அணுகுமுறையில் சில மாற்றம் காணப்படும். சொந்த ஊர் பற்றிய சிந்தனைகள் ஏற்படும். பணி நிமித்தமான பயணங்கள் உண்டாகும். அரசு சார்ந்த சிந்தனைகள் மனதில் மேம்படும். மாணவர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும். திடீர் செலவுகளால் சேமிப்புகள் குறையும். வியாபார அபிவிருத்திக்கான வாய்ப்புகள் அமையும். ஓய்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு