- · 0 friends
இன்றைய ராசி பலன்கள் - 10.2.2026
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். வரவுக்கேற்ப செலவுகள் அமையும். தந்தை வழி சொத்துகளால் ஆதாயம் ஏற்படும். பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். பணி நிமிர்த்தமான பயணத்தால் ஆதாயம் ஏற்படும். கடன் தொடர்பான சிந்தனைகள் அவ்வப்போது ஏற்பட்டு மறையும். இன்ப சுற்றுலா செல்வது தொடர்பான வாய்ப்புகள் அமையும். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
ரிஷபம்
இளைய உடன்பிறப்புகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். சிறு தொழில் புரிபவர்களுக்கு மேன்மையான வாய்ப்புகள் அமையும். விளையாட்டு துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கற்பனை துறைகளில் சாதகமான பலன்கள் ஏற்படும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மிதுனம்
மனதிற்கு பிடித்த விதத்தில் வீட்டில் சிறு மாற்றங்களைச் செய்வீர்கள். நீண்ட காலமாக இருந்து வந்த கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். ஆரோக்கிய விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். சில பயணங்கள் மூலம் புது விதமான அனுபவங்கள் ஏற்படும். தொழில் முயற்சிகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். பயனற்ற சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். திறமை வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கடகம்
சுரங்க தொடர்பான பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். ஆரோக்கிய இன்னல்கள் குறையும். வீடு மாற்ற சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை ஏற்படும். சமூக பணிகளில் செல்வாக்கு மேம்படும். தொழில் நிமித்தமான பயணங்கள் கை கூடும். விவசாயப் பணிகளில் மேன்மையான சூழல் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
சிம்மம்
புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். சிலருக்கு ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும். முக்கிய முடிவுகளில் சிந்தித்து செயல்படவும். புதிய மனை தொடர்பான செயல்களில் ஆர்வம் ஏற்படும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மனதில் இருந்து வந்த குழப்பம் நீங்கி தெளிவு ஏற்படும். கனிவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
கன்னி
இனம் புரியாத சில கனவுகள் மூலம் அமைதியின்மை உண்டாகும். திட்டமிட்ட பணிகளில் கால தாமதங்கள் உண்டாகும். புதுவிதமான பயணங்கள் மூலம் மாற்றங்கள் காணப்படும். குண நலன்களின் சில மாற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் அலைச்சல்கள் உண்டாகும்.தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பதன் மூலம் நன்மைகள் உண்டாகும். குழப்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
துலாம்
குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கமான சூழ்நிலைகள் உருவாகும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுகள் வரும். தொழில் நிமிர்த்தமான பயணம் கைக்கூடும். மறைமுகமான சில விஷயங்களை தெளிவாக புரிந்து கொள்வீர்கள். பணி புரியும் இடத்தில் சிறு சிறு வதந்திகள் ஏற்பட்டு நீங்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உருவாகும். பரிசு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
விருச்சிகம்
தொழில் சம்பந்தமாக வெளிவட்டார தொடர்புகள் உண்டாகும். தனவரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். எண்ணம் மற்றும் தோற்றங்களில் சிறுசிறு மாற்றங்கள் காணப்படும். வாழ்க்கை துணை வழியில் ஒத்துழைப்புகள் மேம்படும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
தனுசு
இணையம் சார்ந்த பணிகளில் சிந்தித்து செயல்படவும். செயல்பாடுகளில் சுதந்திரத் தன்மை அதிகரிக்கும். உணவு சார்ந்த தொழிலில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். பொதுமக்கள் பணிகளில் இருப்பவர்கள் சூழ்நிலை அறிந்து செயல்படவும். ஆன்மீக பயணம் மேற்கொள்வதற்கான சூழல் சிலருக்கு அமையும். செய்கின்ற முயற்சிகளில் புதுவிதமான சூழ்நிலைகள் காணப்படும். சாந்தம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
மகரம்
எதிர்கால முதலீடுகள் பற்றிய ஆலோசனைகள் கிடைக்கும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். மூத்த உடன்பிறப்புகள் மூலம் அலைச்சலும் அனுகூலமும் ஏற்படும். குழந்தைகள் வழியில் ஆதாயம் உண்டாகும். இணையம் துறைகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார பணிகளில் புதுமையான சூழல் ஏற்படும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
கும்பம்
செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படவும். புதிய நபர்களின் அறிமுகங்கள் நல்ல மாற்றம் ஏற்படும். வாகன பயணங்களில் தேவையான ஆவணங்களை எடுத்துச் செல்வது நல்லது. தேவையற்ற விவாதங்களை குறைத்துக்கொள்ளவும். நீண்ட நேரம் கண் விழிப்பதை குறைத்துக் கொள்வது நல்லது. ஆடம்பரமான பொருள்களின் மீது ஆர்வம் உண்டாகும். கவலை விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
மீனம்
தவறிப்போன சில பொருட்கள் கிடைக்கும். புதிய நபர்களின் ஆதரவுகள் மூலம் நட்பு வட்டம் விரிவடையும். தொழில் சார்ந்த முயற்சிகளில் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கவும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். பிரபலமானவர்களின் அறிமுகங்கள் மூலம் மாற்றம் ஏற்படும். நிர்வாக திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு