- · 0 friends
இன்றைய ராசி பலன்கள் - 18.5.2026
மேஷம்: உங்கள் புகழ், கவுரவம் உயரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். பல வகையிலும் பண வரவு அதிகரிக்கும். வாசனைத் திரவியங்கள், கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். அரசு, வங்கி அதிகாரிகளின் நட்பும், அதனால் ஆதாயமும் கிடைக்கும்.
ரிஷபம்: நெருங்கியவர்கள் சிலரால் தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்படும். குடும்பத்தினரிடம் விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். தொழில், வியாபாரத்தில் கவனம் தேவை. நாடி வந்தவர்களுக்கு இயன்ற உதவிகளை செய்வீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.
மிதுனம்: வங்கியில் அடமானம் வைத்த பொருட்களை மீட்பீர்கள். மனைவி வழியில் மதிப்பு கூடும். வியாபாரத்தின் வளர்ச்சிக்காக புதிய வழிமுறைகளைக் கையாளுவீர்கள். அலுவலகத்தில் வேலைகளை விரைந்து முடித்து, அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.
கடகம்: தாய்வழி உறவினர்கள் மத்தியில் மரியாதை, அந்தஸ்து கூடும். சுப நிகழ்ச்சிகள், விருந்தினர்கள் வருகையால் வீடு களைகட்டும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தில் நல்ல லாபம் ஈட்டுவீர்கள். பேச்சில் பொறுமை தேவை.
சிம்மம்: புதிய கோணத்தில் சிந்தித்து செயல்படுவீர்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு, குடும்பத்தில் மகிழ்ச்சி, அமைதி திரும்பும். பழைய சொந்த பந்தங்கள் தேடி வருவார்கள். அரசு அதிகாரிகளின் உதவியால், இழுபறியாக இருந்த சில காரியங்களை முடிப்பீர்கள்.
கன்னி: நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினரின் பேச்சுக்கு செவிசாய்ப்பீர்கள். அக்கம் பக்கத்தினர் ஆதரவாக இருப்பார்கள். ஆன்மிகம், தியானத்தில் ஈடுபாடு உண்டாகும். பண வரவு உண்டு.
துலாம்: தொழில், வியாபார ரீதியாக சிலரை சந்திப்பீர்கள். கடந்தகால சுகமான அனுபவங்கள், சாதனைகளை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். யாரிடமும் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம். எதிலும் உங்கள் கை ஓங்கும். எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள்.
விருச்சிகம்: திடீர் வெளியூர் பயணத்தால் அலைச்சல், வீண் செலவுகள் ஏற்படும். நல்ல வாய்ப்புகளை தவறவிட்டோமே என ஆதங்கப்படுவீர்கள். வாகனத்தில் கவனமாக செல்லுங்கள். வியாபாரத்தில் நிதானம் தேவை. மகான்கள், பெரியவர்களின் ஆசி கிடைக்கும்.
தனுசு: உற்சாகம், தோற்றப் பொலிவு கூடும். கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் நீங்கி அன்யோன்யம் பிறக்கும். கடனாகக் கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து தக்க சமயத்தில் உதவி கிடைக்கும். எதிலும் நிதானம் அவசியம்.
மகரம்: குடும்பத்தினரால் மன நிம்மதி கிடைக்கும். கடன் பிரச்சினை முடிவுக்கு வரும். வெளி வட்டாரத்தில் புதியவர்களின் நட்பு கிடைக்கும். அலுவலகத்தில் இழுபறியாக இருந்த வேலைகளை முடிப்பீர்கள். நண்பர்கள், சகோதரர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள்.
கும்பம்: திறமையுடன் செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். தேவையற்ற மனக் குழப்பம் நீங்கும். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்வது அவசியம். வெளி வட்டாரத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.
மீனம்: குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும். வீண், ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மரியாதை, அந்தஸ்து உயரும். உத்தியோகத்தில் வேலைச் சுமை குறையும்.