·   ·  1043 posts
  •  ·  0 friends

இன்றைய ராசி பலன்கள் - 14.2.2026

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். அரசு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் அலைச்சல்கள் அதிகரிக்கும். மற்றவர்களிடம் எதிர்பார்த்திருந்த சில உதவிகள் கால தாமதமாகவே கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். பாராட்டுகள் கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

 

ரிஷபம்

பழக்க வழக்கங்களில் சிறுசிறு மாற்றங்கள் உருவாகும். இழந்து போன பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் துறையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். சமூக பணிகளில் மதிப்புகள் அதிகரிக்கும். நண்பர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். கால்நடை தொடர்பான பணிகளில் இன்னல்கள் குறையும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

மிதுனம்

கடன்களை தீர்ப்பதற்கான உதவிகள் கிடைக்கும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான பொறுப்புகள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். மற்றவர்கள் மீதான கருத்துக்களில் கவனம் வேண்டும். செயல்பாடுகளில் உடல் உழைப்பு மேம்படும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

கடகம்

உடனிருப்பவர்கள் இடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். மனதில் புது விதமான சிந்தனைகள் உருவாகும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சாதுர்த்தியமான பேச்சுக்கள் மூலம் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதன் மூலம் மேன்மை உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.

சிம்மம்

வெளியூர் பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். கல்வியில் இருந்த மந்த நிலை விலகும். தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். மனதளவில் புதிய சிந்தனைகள் ஏற்படும். வாசனை திரவியங்கள் மீது ஈர்ப்பு உண்டாகும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணம் மேம்படும். தனிப்பட்ட செயல்பாடுகளில் கவனம் வேண்டும். நட்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

கன்னி

மனதில் புது விதமாக தன்னம்பிக்கை உருவாகும். மாணவர்களுக்கு கல்வி பணிகளில் ஏற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபார பணிகளில் அனுகூலமும் செல்வாக்கும் அதிகரிக்கும். தொலைபேசி வாயிலாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சிறு தூரப் பயணங்கள் மூலம் மாற்றங்கள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

 

துலாம்

தானிய வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். அடிப்படை கல்வியில் இருந்த ஆர்வமின்மை குறையும். வரவுகள் மூலம் கையிருப்புகள் அதிகரிக்கும். பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். முயற்சிகளில் இருந்து வந்த தாமதமும் படிப்படியாக குறையும். புதிய நபர்களின் அறிமுகங்கள் மூலம் மாற்றங்கள் ஏற்படும். உடன் பிறந்தவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

விருச்சிகம்

மூத்த உடன்பிறப்புகள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். கலை துறையில் தனிப்பட்ட ஈர்ப்புகள் ஏற்படும். தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். செயல்பாடுகளில் ஆர்வமின்மை ஏற்படும். சேமிப்பு தொடர்பான எண்ணங்கள் மேம்படும். இணைய பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

தனுசு

வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். பயனற்ற செலவுகளை குறைப்பது நல்லது. செயல்பாடுகளில் சுதந்திரத்தன்மை அதிகரிக்கும். வித்தியாசமான கற்பனைகள் மூலம் தூக்கமின்மை சிலருக்கு ஏற்படலாம். திடீர் பயணம் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். குழந்தைகளால் சிறு சஞ்சலங்கள் வந்து நீங்கும். ஆதாயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

 

மகரம்

பேச்சு வன்மையால் காரிய அனுகூலம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். சிந்தனைகளில் மாற்றம் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். கல்விப் பணிகளில் சில நுணுக்கங்களை அறிவீர்கள். வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்கும். வெளியூர் பயண தொடர்பான முயற்சிகள் கைகூடும். சோர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

கும்பம்

கால்நடை தொடர்பான வியாபாரத்தில் லாபங்கள் மேம்படும். வெளிநாட்டு பயண வாய்ப்புகளில் ஆர்வம் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்து வந்த கட்டுப்பாடுகள் விலகும். வாக்கு சாதுரியம் மூலம் தடைப்பட்ட சில காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் ஏற்படும். எதிர்பாராத சில பயணம் மூலம் மாற்றம் உண்டாகும். பக்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளம் ஊதா

 

மீனம்

சொந்த ஊர் பயண வாய்ப்புகள் கைகூடும். கணவன், மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். கூட்டாளிகளின் ஆதரவுகளால் நன்மைகள் ஏற்படும். மருத்துவ பொருட்கள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் பெருகும். விமர்சன பேச்சுக்கள் தோன்றி மறையும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் உருவாகும். ஓய்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

  • 43
  • More
Comments (0)
Login or Join to comment.