- · 0 friends
மார்க் ட்வெயின் சொன்ன பதில்
அமெரிக்க கதையாசிரியர் மார்க் ட்வெயினிடம் ஒருவர் கேட்டாராம். "ஒரு மனிதன் தன் வாழ்நாளில் எப்படி வாழவேண்டும்?"
அதற்கு மார்க் ட்வெயின் சொன்ன பதில் இது. "சவப்பெட்டி செய்யும் தொழிலாளி இருக்கிறான் அல்லவா? யாராவது இறந்தால்தான் அவனுக்கு தினப்படி வருமானம். எனவே எந்தவொரு இறப்பும் உள்ளூற அவனுக்கு மகிழ்ச்சியையே அளிக்கும். ஆனால் அப்படிப்பட்ட தொழிலாளியே இன்னொரு நபருக்காக .. 'அய்யோ....இவர் இறந்து போய் விட்டாரே!" என்று உண்மையிலேயே மனமுருகி அழுகிறார் என்று வைத்துக் கொள்வோம். இறந்து போன அந்த நல்ல மனிதர் அளவிற்கு சுற்றியுள்ள சமூகத்தால் நேசிக்கப்படுவராக ஒருவர் வாழ வேண்டும்".