·   ·  279 posts
  •  ·  0 friends

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த மிகவும் பயனுள்ள இயற்கை வைத்தியம்

Method 1

முளை கட்டிய வெந்தயம் ஒரு ஸ்பூன் ஒவ்வொரு வேளை உணவுக்கு பதினைந்தில் இருந்து முப்பது நிமிடங்களுக்குள் சாப்பிட வேண்டும்.

வெந்தயம் குறைந்தது 36 மணி நேரம் முளை கட்டியதாக இருக்க வேண்டும்.

ஒவ்வொரு நாளும் முளை கட்ட முடியவில்லை என்றால் அரை கிலோ அல்லது ஒரு கிலோ வெந்தயத்தை ஒரு இரவு மட்டும் ஊற வைத்து மறுநாள் காலையில் தண்ணீரை வடிகட்டி வெந்தயத்தை ஒரு துணியில் கட்டி தொங்க விட வேண்டும்.

குறைந்தது 36 மணி நேரம் முளை கட்ட வேண்டும். இரண்டு செ மீ அளவுக்கு முளை வந்து இருக்கும். அந்த முளை வந்த வெந்தையத்தை நிழலில் கவனிக்கவும் நிழலில் காயப் போட்டு நன்கு காய்ந்த பின் அரைத்து பொடியாக்கி சேமித்து வைத்துக் கொண்டு அந்த வெந்தயப் பொடியில் ஒரு ஸ்பூன் ஒவ்வொரு வேளை உணவுக்கு பதினைந்தில் இருந்து முப்பது நிமிடங்களுக்குள் சாப்பிட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து தினமும் சாப்பிட்டு வர சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும் சர்க்கரை நோய் பாதிப்புகளும் படிப்படியாக விலகும். இது மருத்துவர் முனைவர் அன்புகனபதி அவர்கள் சொன்ன இயற்கை மருத்துவ முறை ஆகும்.

Method 2

இரண்டு பெரிய நெல்லிக்காய் எடுத்து கொட்டை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சியில் போட்டு அத்துடன் கால் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து சிறிது வெந்நீர் விட்டு அரைத்து எடுக்கவும்.

இப்படி அரைத்துக் கிடைத்த விழுதை ஒரு குவளை தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து அரை குவளையாக சுருக்கி இறக்கி வடிகட்டி காலை வெறும் வயிற்றில் குடித்து வரவும் தேவைப்பட்டால் இரவு படுக்கப் போகும்போதும் குடிக்கலாம்.

இவ்வாறு தொடர்ந்து தினமும் குடித்து வர சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும் சர்க்கரை நோய் பாதிப்புகளும் படிப்படியாக விலகும்.

நெல்லிக்காய் கிடைக்காதவர்கள் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் நெல்லிக்காய் பொடி வாங்கி அந்த பொடியில் ஒரு ஸ்பூன் பொடி அரை ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைத்து வடி கட்டி குடிக்கலாம். இதை Golden Recipe for Diabetes..தங்க சாறு என்று சொல்வார்கள்

இது ஆயுர்வேத மருத்துவர் கவுதமன் அவர்கள் தொலைக் காட்சி நிகழ்ச்சியில் செய்து காட்டிய இயற்கை மருத்துவம் ஆகும்.

Method 3

தினமும் ஐந்து கோவைக்காய் சமைக்காமல் பச்சையாக சாப்பிட்டு வர சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.

இந்த மூன்று இயற்கை வீட்டு மருந்துகளையுமே சாப்பிட்டு வரலாம். நீரிழவு கட்டுக்குள் வருவதைப் பொறுத்து மருந்துகளின் தேவையை படிப் படியாகக் குறைத்துக் கொள்ளலாம்.

பயன்படுத்தி நலம் அடைந்து நீங்கள் நலம் அடைந்ததை உங்கள் உறவினர்கள் நண்பர்களுக்கும் சொல்லி அவர்களையும் நோயின்றி மகிழ்வுடன் வாழ உதவுங்கள்

  • 42
  • More
Comments (0)
Login or Join to comment.