இன்றைய ராசி பலன்கள் - 6.2.2026
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
மற்றவர்களுக்கு கருத்துசொல்வதை குறைத்துக் கொள்வது நல்லது. கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். நெருக்கமானவர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் ஏற்படும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். மனதிற்குப் பிடித்த புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபார நிமித்தமான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். வரவு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
ரிஷபம்
பூர்வீக சொத்துக்கள் மூலம் மேன்மையான சூல்நிலைகள் உண்டாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடினமான செயல்களையும் எளிமையாக புரிந்து கொள்வீர்கள். புதிய தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்த மந்த தன்மை குறையும். மறைமுக திறமைகளை வெளிப்படும். ஆக்கப்பூர்வமான நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்
மிதுனம்
குடும்பத்தில் கலகலப்பான சூழல் அமையும். மனதிற்குப் பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். பயணங்கள் மூலம் சாதகமான சூழ்நிலைகள் உருவாகும். சிற்றின்ப செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். மனை விற்பது வாங்குவது தொடர்பான பணிகளில் லாபங்கள் உண்டாகும். புதுவிதமான பயிற்சிகளில் கலந்து கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் மதிப்புகள் மேம்படும். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
கடகம்
குணநலன்களில் சில மாற்றம் உண்டாகும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். எதிர்பாராத சில மாற்றம் உண்டாகும். வியாபாரம் நிமித்தமான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். வெளியூர் பணி நிமித்தமான சிந்தனைகள் மேம்படும். உணர்ச்சி வேகமின்றி பொறுமையுடன் செயல்படவும். கற்றல் பணிகளில் இருந்து வந்த குழப்பங்கள் குறையும். வாழ்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
சிம்மம்
அரசால் அனுகூலம் உண்டாகும். கல்வி பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். கடன் பிரச்சனைகள் படிப்படியாக குறையும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் ரீதியான பயணங்கள் மூலம் நன்மைகள் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்து வந்த பொறுப்புகள் குறையும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
கன்னி
கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். தொழில் சார்ந்த புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். பூர்வீகத்தில் இருந்துவந்த வேறுபாடுகள் நீங்கி சாதகமான முடிவுகள் ஏற்படும். நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வதன் மூலம் ஆர்வம் அதிகரிக்கும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : காவி
துலாம்
உடல் ஆரோக்கியம் மேம்படும். விவசாய பணிகளில் மேன்மை உண்டாகும். குடும்ப உறுப்பினர்கள் இடத்தில் மனம் விட்டுப் பேசுவதன் மூலம் தெளிவு ஏற்படும். தொழில் நிமித்தமான சிந்தனைகள் மேம்படும். மற்றவர்களிடம் வீண் வாதங்களை தவிர்க்கவும். வெளியூர் பயணங்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். அரசு பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். கனிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
விருச்சிகம்
போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். எதிர் பாலின மக்கள் மூலமாக பிறக்கும். குழந்தைகள் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சனைகளுக்கு தெளிவுகள் ஏற்படும். குறுந்தொழில் கடன் கொடுப்பதில் சிந்தித்து செயல்படவும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
தனுசு
புதிய நபர்களிடம் விழிப்புடன் செயல்படவும். பழைய நினைவுகள் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும். தொழில் சார்ந்த சில நெருக்கடிகள் தோன்றி மறையும். பொன் பொருள்களை கையாள்வதில் கவனம் வேண்டும். உத்தியோக பணிகளில் பதற்றம் இன்றி செயல்படவும். அரசு பணிகளில் தாமதங்கள் உண்டாகும். பணிகளை செய்து முடிப்பதில் அலைச்சல்கள் ஏற்படும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
மகரம்
உடன் இருப்பவர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை உருவாக்கும். கடன் சார்ந்த சிந்தனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். வியாபார பணிகளில் மேன்மை ஏற்படும். உறவினர்களிடத்தில் புரிதல் உண்டாகும். நண்பர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். மனை சார்ந்த பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். சிரமம் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
கும்பம்
அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு கிடைக்கும். பொருளாதாரம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். வியாபார பணிகளில் முன்னேற்றமான சிந்தனைகள் உண்டாகும். செயல்பாடுகளில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகளை புரிந்துகொள்வீர்கள். கடன்களை அடைப்பதற்கான எண்ணங்கள் மேம்படும். வழக்கு பணிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். சாந்தம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மீனம்
கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். செயல்பாடுகளில் இருந்து வந்த மந்த தன்மை குறையும். கோபத்தை குறைத்து செயல்படுவதன் மூலம் உறவுகள் மேம்படும். புதுவிதமான கலைகளில் ஆர்வம் உண்டாகும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். திறமை வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு