- · 0 friends
காமெடி கதை
ஏனுங்க…., இங்கே பாண்டிய ராஜன் மளிகை எங்கே இருக்குது…….
அந்த மன்னர் கால மாளிகை எல்லாம் இப்போ ஏதுங்க….. ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி இருந்துச்சி….
நீங்கஎன்னசார்…,நான்மளிகைக்கடையைசொன்னேன்….
ஓ…..அதுவா….. பக்கத்து வீதியிலே இருக்கு….. அதுக்கென்ன இப்போ…
அவரு வீட்டுலே ஒரு பொண்ணு இருக்குதாமே……
இருந்தா இருந்துட்டு போகட்டும்…அது அவருக்கு தானே சொந்தம்….
அடராமா….நான்பொன்னைசொல்லலைங்க……பெண்…. பெண்….
பென் தானே…. அவர் கடையில் கூட விக்குதே…..
அய்யோ….. கல்யாண வயசுலேஒரு பொண்ணுங்க…..
இப்படி விளக்கமா சொன்னா தானே புரியும்……இதை யாரு உங்களுக்கு சொன்னது……
காசிமங்கலம்புரோக்கர் சொன்னாருங்க…….
என்னது கசமாலம் புரோக்கரா…..
காசிமங்கலம் கணேசுங்க……
அப்பசரி……பையன்என்ன படிச்சிருக்கான்…..
BA…ங்க…..
இந்த காலத்திலே படிப்பெல்லாம் பிடெக்….. M…டெக்…. AI டெக்னாலஜி ரேஞ்சில்போய்க்கிட்டுஇருக்கு….. நீங்க என்னாடான்னா இந்த ஓல்ட் மாடல் BA வை விடமாட்டேன் என்கிறீங்க…..
என்னங்க செய்யறது அவன் அதுக்கு மேல் படிப்பே தேவையில்லைன்னு சொல்லிட்டான்….
சரி…போகட்டும் பையன் எங்கிட்டு வேலைக்கு போறான்……
விவசாயங்க…….
என்னது விவசாயமா….. அப்ப பொண்ணு கிடைக்காதுங்க……வந்த வழியே ஊருக்கு இப்படியே போங்க…
அதை சொல்ல நீங்க யாருங்க…..
நான்தான் நீங்க தேடி வந்த பாண்டியராஜன்….
சொந்த பூமிங்க…. ரெண்டு போகம்விளைச்சல் மொத்தம் எண்பது மூட்டை நெல்லு விலையுது…..
இதுவென்னபெரிய விளைச்சலா…
பின்ன…. இருபது ஏக்கர் நிலத்திலே எண்பதாயிரம் மூட்டை நெல் பெரிய விளைச்சல் தான்…அவனுக்கு எதுக்கு வேலை…அவனே நூறு பேருக்கு வேலை தரான்….. சரி கிளம்பறேன்….
நக்கீரா….. நில்… உன் தமிழோடுவிளையாடவே யாம் வந்தோம்….. ப்ரோக்கர்கணேஷ் எப்போதோ நீங்கள் வருவதாக சொல்லி விட்டு வீட்டில் பையனோடுகாத்திருக்கிறார்…. நடுவிலேயே உங்கள வரவேற்க நின்னேன்…. போதுமா சம்மந்தி….