·   ·  172 news
  •  ·  0 friends

கனடிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கெரி ஆனந்தசங்கரி அதிரடி அறிவிப்பு

கனடிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கெரி ஆனந்தசங்கரி, இணைய வழியில் வன்முறையைத் தூண்டும் அமைப்புக்களை தீவிரவாத பட்டியலில் இணைப்பதாக அறிவித்துள்ளார்.

இணையத்தின் ஊடாக இளையோர் மத்தியில் வன்முறையைத் தூண்டும் 764 என்ற அமைப்பினை தீவிரவாத இயக்கமாக கனடா அறிவித்துள்ளது.

இந்த இயக்கத்தை தீவிரவாத இயக்கமாக அறிவித்த உலகின் முதல் நாடு கனடா என்பது குறிப்பிடத்தக்கது.

கனடிய மத்திய அரசாங்கம் இந்த விடயத்தை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அமைப்புடன் மேலும் நான்கு அமைப்புகள் கனடாவின் குற்றவியல் சட்டத்தின் கீழ் தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன:

764, மெனியக் மெர்டர் கல்ட், டெரோகிராம் கலக்டிவ், இஸ்லாமிய ஸ்டேட் மொசாம்பிக் ஆகிய அமைப்புக்கள் இவ்வாறு தீவிரவாத இயக்கப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.

அரசின் அறிக்கையில், 764 உள்ளிட்ட தீவிரவாத பட்டியலில் இணைக்கப்பட்ட அமைப்புக்கள் சமூக ஊடகங்கள் மற்றும் ஆன்லைன் கேமிங் தளங்களை பயன்படுத்தி ஆட்சேர்ப்பு நடடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இந்த அமைப்புகள் தீவிரவாத சிந்தனைகளை பரப்புதல், மற்றும் ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் வன்முறையைத் தூண்டுவது என்பனவற்றில் ஈடுபடுகின்றன என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கனடாவில் பொலிஸார் பலமுறை பெற்றோர்களுக்கு இந்த வலைப்பின்னலின் அபாயங்களை எச்சரித்துள்ளது. 764 அமைப்பு குழப்பம் மற்றும் வன்முறையின் மூலம் நாகரிக சமுதாயத்தை அழிக்க முயல்வதாக அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். இந்த அமைப்புகள் குழந்தைகளை குறிவைக்கின்றன

அவற்றைத் தடுப்பதற்கு சட்ட அமலாக்கத்துக்கு மேலும் அதிகாரங்கள் தேவை. இந்த புதிய அறிவிப்பு அதை வழங்குகிறது என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கெரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

  • 63
  • More
Comments (0)
Login or Join to comment.