·   ·  122 news
  •  ·  0 friends

மோசடி குறுந்தகவல்கள் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடா முழுவதும் மோசடி குறுந்தகவல்கள் எண்ணிக்க அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்கிகள், தபால் திணைக்களம் அல்லது வருமான வரித்துறை (CRA) ஆகியவற்றின் பெயரில் வரும் மோசடி குறுந்தகவல்கள் அதிகரித்துள்ளன. பெரும்பாலானோர் அவை போலியானவை என்று அறிந்திருந்தாலும், பலர் இன்னும் இத்தகைய சதிகளுக்குள் சிக்கி வருகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.

போமன்வில்லில் (Bowmanville, Ontario) வசிக்கும் கேவின் போரிசிக் சமீபத்தில் ஃபேஸ்புக் மார்க்கெட் பிளேஸில் ஒரு மீன்பிடி கம்பி விற்க முயன்றபோது ஒரு மோசடிக்குள்ளானார்.

கொள்வனவாளர் என நம்பிய ஒருவர் அவருக்கு 150 டொலர் பணம் அனுப்பியதாகக் கூறி ஒரு e-Transfer இணைப்பை அனுப்பினார். போரிசிக் அந்த இணைப்பை கிளிக் செய்ததும், அவரது வங்கிக் கணக்கில் இருந்து 400 டொலர் மோசடியாக எடுக்கப்பட்டது. அவரிடமிருந்து பணம் வருமென நினைத்தேன், ஆனால் என் கணக்கிலிருந்தே பணம் போய்விட்டது, என அவர் கூறினார்.

கனேடியர்கள் அதிக அளவில் மோசடி அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றனர் என புதிய சைபர் பாதுகாப்பு ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. தற்போது, போலி செய்திகள் மின்னஞ்சல், குறுந்தகவல் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக பரவுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  • 144
  • More
Comments (0)
Login or Join to comment.