
கனடாவில் வீட்டு விற்பனையில் சாதகமான நிலைமை
கனடாவில் வீட்டு விற்பனையில் சாதகமான நிலைமை பதிவாகியுள்ளதாக கனடிய வீட்டுமனை ஓன்றியம் (CREA) வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த2025 ஜூலையில் வீடு விற்பனை கடந்த ஆண்டை விட 6.6% உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மாதங்களில் மந்தமாக இருந்த வீட்டுச் சந்தை மீண்டும் உயர்ந்து வருகின்றது. கடந்த ஜூலையில் மொத்தம் 45,973 வீடுகள் விற்கப்பட்டன. இது 2024 ஜூலையில் 43,122 காணப்பட்டது.
கடந்த ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் விற்பனையானது 3.8% உயர்வடைந்துள்ளது. கடந்த மாதம் தொடர்ச்சியாக நான்காவது மாதமாக வீடு விற்பனை அதிகரிப்பினை பதிவு செய்துள்ளது. குறிப்பாக டொரண்டோ பெரும்பாக பகுதியில் வீட்டு விற்பனையானது 33.5 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.