நேட்டோ ஆதரவில் கனடா உறுதி - கார்னி
உக்ரைன் பேச்சுவார்த்தைகள் குறித்த கவலைகளுக்கு மத்தியில், நேட்டோவுக்கு கனடா தொடர்ந்து உறுதியாக ஆதரவு அளிக்கும் என பிரதமர் மார்க் கார்னி தெரிவித்தார். மணிலாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கனடா தனது கூட்டாளிகளுடன் நிற்கும் என்றார்.
கனடா தனது பாதுகாப்பு கடமைகளில் இருந்து பின்வாங்காது என்றும், உக்ரைன் விவகாரத்தில் நியாயமான அமைதிக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்றும் அவர் கூறினார். இது கனடாவின் வெளியுறவு கொள்கையில் தொடர்ச்சியை காட்டுவதாக அமைந்தது.