
இன்னும் ஐந்தே ஆண்டுகளில் உலகமே தலைகீழாக மாறிடும் - பில்கேட்ஸ்
ஏஐ துறை இப்போது உலகில் மிகப் பெரிய புயலாக உருவெடுத்துள்ள நிலையில், இதன் எதிர்காலம் குறித்து உலகின் பெரும் பணக்காரரான பில்கேட்ஸ் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பில் கேட்ஸ் கூறுகையில், "அடுத்த ஐந்து ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு வேற லெவலில் வளர போகிறது. அதேநேரம் இந்த தொழில்நுட்பத்தைப் பார்த்து நாம் அச்சப்படத் தேவையில்லை.. இதன் மூலம் நமக்குப் பல புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்" என்றார்.
வளர்ந்து வரும் ஏஐ தொழில்நுட்பத்தால் வளர்ந்த நாடுகளில் சுமார் 60% வேலைகள் காலியாகும் என்றும் சர்வதேச அளவில் 40% வேலைகள் காலியாகும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா கடந்த வாரம் கூறியிருந்த நிலையில், அதற்குப் பதிலாக பில்கேட்ஸ் இந்த கருத்துகளைக் கூறியுள்ளார்.
இது குறித்து பில்கேட்ஸ் மேலும் கூறுகையில், "ஒவ்வொரு புதிய தொழில்நுட்பம் வரும் போதும் அச்சம் வரத் தான் செய்யும். இதனால் வேலைவாய்ப்புகள் காலியாகும் என்பார்கள். ஆனால், அப்படி எதுவும் நடக்காது.
1900இல் விவசாய உற்பத்தியை தாண்டி எதுவும் இருக்காது என்று நினைத்தோம். ஆனால் இப்போது விவசாய வேலைகளைத் தாண்டி பல புதிய வேலைகள் உருவாக்கியுள்ளோம். இதனால் மக்கள் வாழ்க்கையும் மேம்பட்டே இருக்கிறது. இந்த ஏஐ அதுபோலத் தான் இருக்கும். இது மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும்.. பல்வேறு தரப்பினருக்கும் இது மிகப் பெரியளவில் உதவும்.