·   ·  317 news
  •  ·  0 friends

இணைய விளம்பரத்தை நம்பி ஏமாந்த பெண்

கனடாவின் மார்க்கம் பகுதியைச் சேர்ந்த லூயிஸ் ரென்விக் என்ற பெண், தனது 4 ஆண்டுகள் பழமையான சமையல் அடுப்பு பழுதடைந்ததால் சந்தித்த ஏமாற்றத்தை விபரித்துள்ளார்.

இந்த மாத தொடக்கத்தில் லூயிஸின் அடுப்பு வேலை செய்வதை நிறுத்தியுள்ளது. இதையடுத்து, அவர் கூகுளில் தேடியபோது, முதலில் வந்த 'தி ஏ டீம் அப்ளையன்ஸ் ரிப்பேர்' என்ற உள்ளூர் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டுள்ளார்.

அங்கிருந்து வந்த தொழில்நுட்ப வல்லுநர், அடுப்பின் 'டெம்பரேச்சர் சென்சார்' பழுதாகிவிட்டதாகக் கூறி, அதை மாற்றுவதற்கு 798 கனேடிய டொலர் கட்டணமாக வாங்கியுள்ளார்.

அவர் வீட்டை விட்டு கிளம்பும் முன்பே, அடுப்பில் பழுதைக் காட்டும் 'எரர் சிக்னல்' (Error sign) அப்படியே இருப்பதை கவனித்தேன். 'சற்று நில்லுங்கள், இது வேலை செய்யவில்லை' என்று கூறினேன். ஆன் செய்து பார்த்தபோது அவர் வருவதற்கு முன்பு எப்படி இருந்ததோ, அதே நிலையில்தான் அடுப்பு சென்சாரை மாற்றியும் அடுப்பு சரியாகாததால், அந்த ஊழியர் அடுத்து "அடுப்பின் மெயின் போர்டு (Main Board) தான் கெட்டுப்போயுள்ளது, அதை மாற்ற 690 டாலர் ஆகும்" என்று கூறியுள்ளார்.

நிறுவனம் இதற்கு 10% தள்ளுபடி தருவதாகக் கூறினாலும், வரி மற்றும் உழைப்புக் கட்டணத்தையும் (Labour cost) சேர்த்தால், அவர் மேலும் 700 முதல் 800 டாலர் வரை கொடுக்க வேண்டியிருக்கும். அதாவது, ஏற்கனவே கொடுத்த 800 டாலரோடு சேர்த்தால் மொத்தம் 1,600 டாலருக்கும் மேல் செலவாகும்.

ஆனால், லூயிஸ் அந்த அடுப்பை வாங்கிய புதிய விலையே $1,000 டாலர் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது. "நான் ஏற்கனவே கொடுத்த 800 டாலருடன், கூடுதலாக இன்னும் 700 அல்லது $800 டாலர் தர ஒப்புக்கொண்டால் மட்டுமே மீண்டும் வர முடியும் என்று அவர்கள் கூறிவிட்டனர்.

இது எனக்கு எவ்வகையிலும் ஏற்புடையதல்ல" என்று லூயிஸ் கோபத்துடன் தெரிவித்தார். அந்த நிறுவனம் கொடுத்த ரசீதில் மார்க்கம் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் முகவரி இருந்தது. ஆனால் நேரில் சென்று விசாரித்தபோது, அந்த நிறுவனம் 5 மாதங்களுக்கு முன்பே அங்கிருந்து காலி செய்துவிட்டதாகப் பாதுகாவலர் தெரிவித்தார்.

நிறுவனத்திற்கு அனுப்பிய மின்னஞ்சல்களுக்குப் பதில் இல்லை; தொலைபேசியில் அழைத்தபோது இணைப்பைத் துண்டித்துவிட்டனர்.

இந்தச் சம்பவத்தை முன்வைத்து நிபுணர்கள் சில முக்கிய எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர்: கூகுள் போன்ற தேடுபொறிகளில் சில நிறுவனங்கள் பணம் கொடுத்து தங்களது விளம்பரங்களை முதலாவதாகக் காண்பிக்கும். எனவே, முதலில் வருவதெல்லாம் தரமான நிறுவனம் என்று நம்பக் கூடாது.

பொருட்கள் பழுதடைந்தால், கூகுளில் தேடுவதற்குப் பதிலாக நேரடியாக அந்தப் பொருளைத் தயாரித்த நிறுவனத்தையே அல்லது பயனர் கையேட்டில் உள்ள எண்ணையோ தொடர்புகொள்வது பாதுகாப்பானது.

ஒரு பொருளைப் பழுதுபார்ப்பதற்கான செலவு, புதிய பொருளின் விலையில் பாதியைக் காட்டிலும் அதிகமாக இருந்தால், அதைச் சரிசெய்வதை விடப் புதிய பொருளை வாங்கிவிடுவது புத்திசாலித்தனம்.

பாதிக்கப்பட்ட லூயிஸ் ரென்விக், இனி அந்தப் பழைய அடுப்பிற்குப் பணம் செலவழிக்கப் போவதில்லை என்றும், 1,200 டாலர் கொடுத்து புதிய அடுப்பு ஒன்றையே வாங்கப் போவதாகவும் முடிவு செய்துள்ளார்.

  • 8
  • More
Comments (0)
Login or Join to comment.