
கனடாவுக்கு ட்ரம்ப் மீண்டும் அழைப்பு
அமெரிக்காவின் 51 ஆவது மாகாணமாக கனடாவுக்கு டிரம்ப் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.
கனடா பிரதமர் பதவியிலிருந்து ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்து பதவி விலகிய போது அமெரிக்காவின் 51 ஆவது மாகாணமாக கனடா ஏன் மாறக்கூடாது என்று டிரம்ப் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கனடா அமெரிக்காவின் தயவில்தான் இருக்கிறது. நாம் அவர்களுக்கு நிதி உதவி கொடுக்கிறோம். நிறையச் சலுகைகள் கொடுக்கிறோம். ஏற்றுமதி, இறக்குமதி வாய்ப்பு தருகிறோம். கனடா அமெரிக்காவுடன் இணைந்தால், வரிகள் இருக்காது, வரிகள் வெகுவாகக் குறையும். மேலும் அவர்களைச் சுற்றித் தொடர்ந்து இருக்கும் ரஷ்ய மற்றும் சீனக் கப்பல்களின் அச்சுறுத்தலிலிருந்து அவர்கள் முற்றிலும் பாதுகாப்பாக இருப்பார்கள். ஒன்றாகச் சேர்ந்தால், அது எவ்வளவு சிறந்த தேசமாக இருக்கும் என டிரம்ப் பதிவிட்டார். டிரம்பின் இந்த கருத்துக்கு கனடா அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில், நீங்கள் ஏன் அமெரிக்காவுடன் இணையக் கூடாது என்று கனடாவுக்கு டிரம்ப் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய டிரம்ப், அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக கனடா இணைந்தால், Golden Dome எனும் வான் பாதுகாப்புத் திட்டம் கனடாவுக்கு இலவசமாகவே கிடைக்கும் என தெரிவித்தார்.