·   ·  93 news
  •  ·  0 friends

பிரின்ஸ் எட்வர்ட் தீவில் வேலை இழப்பு விகிதம் அதிகரிப்பு

கனடாவின் பிரின்ஸ் எட்வர்ட் தீவில் (P.E.I.) செப்டம்பர் மாதத்தில் வேலை இழப்பு விகிதம் 1.6 சதவீதத்தினால் உயர்ந்ததுள்ளது. இது கனடாவில் மிகப்பெரிய உயர்வாகும் என கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்ட தகவலில் கூறப்பட்டுள்ளது.

கனடா முழுவதும் செப்டம்பரில் 60,000 புதிய வேலைகள் உருவாகியுள்ளன. இது இரண்டு மாதங்களாக நடந்த வீழ்ச்சிக்கு பின் 0.3% உயர்வாகும். இருப்பினும், தேசிய வேலை இழப்பு விகிதம் 7.1% என மாறாமல் காணப்படுகின்றது.

பல நேரங்களில் விண்ணப்பதாரர்களின் தகுதிகள் மற்றும் ஆரம்ப நிலை பணிகளுக்கான தேவைகள் பொருந்தாமல் இருக்கின்றன. இதனால் வேலை வழங்குநர்களும் தயங்குகிறார்கள் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

  • 830
  • More
Comments (0)
Login or Join to comment.