கனடாவில் திரும்பப் பெறபப்டும் வாகனங்கள்
ஹூண்டாய் நிறுவனம் கனடாவில் 5,616 வாகனங்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது.
பர்ஜ் கட்டுப்பாட்டு அமைப்பில் உள்ள சேக் வால்வு கோளாறு காரணமாக எரிபொருள் கசிவு ஏற்பட்டு, தீ அபாயம் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. சில வாகனங்களில், பர்ஜ் கட்டுப்பாட்டு அமைப்பின் சேக் வால்வு, எரிபொருள் தொட்டி பெரிதாகும் நிலை உருவாகலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் எரிபொருள் தொட்டி சூடான கூறுகளுடன் தொடும் அபாயம் உள்ளது; அதனால் எரிபொருள் கசிவு ஏற்படலாம் இந்த திரும்ப பெறல் 2020–2023 Hyundai Sonata மாடல்களுக்கு பொருந்தும்.
ஆனால் 1.6 லிட்டர் டர்போ சார்ஜ் என்ஜின் பொருத்தப்பட்ட குறிப்பிட்ட வாகனங்களே பாதிக்கப்பட்டுள்ளன. இந்த திரும்ப பெறல், முன்பு வெளியிடப்பட்ட 2025637 (Hyundai C0566) திரும்ப பெறலை மாற்றுகிறது.
அந்த திரும்ப பெறலின் கீழ் ஏற்கனவே பழுது பார்த்த வாகனங்களும் மீண்டும் இந்த பழுது பார்க்கப்பட வேண்டும். அறிவிப்பின்படி, ஹூண்டாய் நிறுவனம் பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு கடிதம் மூலம் தகவல் வழங்கி, அருகிலுள்ள டீலர்ஷிப்பில் சேக் வால்வை பரிசோதித்து மாற்றவும், ECU (எலக்ட்ரானிக் கட்டுப்பாட்டு யூனிட்) மென்பொருளை புதுப்பிக்கவும் அறிவுறுத்தும்.
எரிபொருள் தொட்டியும் அதைச் சுற்றியுள்ள கூறுகளையும் பரிசோதித்து, தேவையானால் பழுது பார்க்கும். கடந்த இரண்டு மாதங்களில், ஹூண்டாய் நிறுவனம் கனடாவில் சுமார் 44,000 வாகனங்களை சீட்பெல்ட் கோளாறு, மேலும் 13,000-க்கும் மேற்பட்ட வாகனங்களை ஸ்டார்டர் மோட்டரில் உள்ள கோளாறு காரணமாக திரும்ப பெற்றது.