·   ·  313 news
  •  ·  0 friends

கனடாவில் மயானத்தில் தொடர் கொள்ளை

கனடாவின் ஹமில்டனில் உள்ள 'வைட் சேப்பல் மெமோரியல் கார்டன்' மயானத்தில் பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபரை காவல்துறயைினர் கைது செய்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 17ஆம் திகதிக்கும் ஏப்ரல் 21ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இந்தத் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மயானத்திற்குச் சென்ற உறவினர்கள், தங்கள் அன்புக்குரியவர்களின் கல்லறைகளில் வைக்கப்பட்டிருந்த மலர்ச்சாடிப் பாத்திரங்கள் காணாமல் போயுள்ளதாக காவல்துறையினரிடம் முறையிட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், சுமார் 40 மலர்ச்சாடிப் பாத்திரங்கள் வரை அங்கு திருடப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

ஹமில்டன் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி, கடந்த மே 13ஆம் திகதி ஹமில்டனைச் சேர்ந்த ஜேசன் மெக்கின்டோஷ் என்ற நபரைக் கைது செய்தனர்.

5,000 டாலருக்கும் அதிக மதிப்புள்ள திருடப்பட்ட சொத்துக்களை வைத்திருந்தமை, 5,000 டாலருக்கும் அதிக மதிப்புள்ள திருடப்பட்ட சொத்துக்களை சட்டவிரோதமாக வியாபாரம் செய்தமை , குற்றச் செயல்கள் மூலம் ஈட்டப்பட்ட வருமானத்தை கைவசம் வைத்திருந்தமை, தடை விதிக்கப்பட்டிருந்த பின்னரும் வாகனத்தை இயக்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து திருடப்பட்ட பல மலர்ச்சாடிப் பாத்திரங்கள் மீட்கப்பட்டுள்ளன. அவை விரைவில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என ஹமில்டன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

  • 48
  • More
Comments (0)
Login or Join to comment.