கனடாவில் 68,300 வேலைகள் இழப்பு
கனடாவின் வேலைவாய்ப்பு சந்தை செப்டம்பரில் கடுமையாக பலவீனமடைந்தது, வேலைவாய்ப்பு 68,300 குறைந்து வேலையின்மை விகிதம் 6.5% ஆக உயர்ந்தது. இது Bank of Canada வட்டி விகிதத்தை உயர்த்துவதை தாமதப்படுத்துமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
கனடாவின் புள்ளி விவரம் திணைக்கம் (Statistics Canada) அக்டோபர் 9 அன்று வெளியிட்ட இந்த புள்ளிவிவரம், ஆகஸ்டில் 41,700 வேலை இழப்பைத் தொடர்ந்து வந்துள்ளது. பொருளாதார நிபுணர்கள் 9,200 வேலைகள் அதிகரிக்கும் என எதிர்பார்த்த நிலையில், இந்த சரிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.