·   ·  131 news
  •  ·  0 friends

ஒண்டாரியோ மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தில் அண்மைய வாரங்களில் மோசடி சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அண்மையில், நார்த் பே பகுதியில் வசிக்கும் ஒருவரிடம் இருந்து 250,000 டொலர் தொகை மோசடி செய்யப்பட்டது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில வாரங்களில் கிரிப்டோகரன்சி மோசடிகள், ஆன்லைன் சந்தை ஏமாற்றங்கள், காதல் மோசடிகள் மற்றும் பரிசு அட்டை மோசடிகள் தொடர்பான பல புகார்களுக்கு எங்கள் அதிகாரிகள் பதிலளித்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நார்த் பே பகுதியில் ஒருவர் 2025 ஜூலை மாதம் முதல் போலியான இணையதளம் மற்றும் கணக்கில் பணம் செலுத்தி வந்ததாகவும், அது முதலீட்டு மோசடியாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மிகவும் நூதனமான முறையில் மோசடிகள் இடம்பெறுவதாகவும் பல்வேறு வழிகளில் மக்கள் ஏமாற்றப்படுவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  • 91
  • More
Comments (0)
Login or Join to comment.