கனடாவின் வர்த்தக உபரி 4 ஆண்டுகளில் உச்சம்
அமெரிக்காவின் புதிய 50% வரிகள் அமலுக்கு வருவதற்கு முன்பு ஏற்றுமதியாளர்கள் அவசரமாக பொருட்களை அனுப்பியதால், கனடாவின் வர்த்தக உபரி ஆகஸ்ட் மாதத்தில் C$4.2 பில்லியனாக (சுமார் $2.94 பில்லியன்) உயர்ந்துள்ளது. இது 4 ஆண்டுகளில் இல்லாத அளவு. ஜூலையில் C$787 மில்லியனாக இருந்த உபரி, ஆகஸ்டில் 430% க்கும் மேல் உயர்ந்துள்ளது.
அமெரிக்காவுக்கான கனடாவின் ஏற்றுமதி ஆகஸ்டில் 8.1% அதிகரித்துள்ளது, இறக்குமதி 2.5% குறைந்துள்ளது. இதனால் அமெரிக்காவுடனான வர்த்தக உபரி மட்டும் C$11.2 பில்லியனாக உள்ளது. எரிசக்தி, நுகர்வோர் பொருட்கள், இயந்திரங்கள் ஏற்றுமதி பெரும் வளர்ச்சியை கண்டுள்ளது என்று Statistics Canada தெரிவித்துள்ளது.