·   ·  40 news
  •  ·  0 friends

கனடாவில் மகனை இழந்த இலங்கைத் தமிழ் தம்பதியர்

கனடாவில் இலங்கைத் தமிழ் தம்பதியரின் மகன் சுட்டுக் கொல்லப்பட்ட விடயம் தொடர்பில் 17 வயது இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒன்ராறியோவிலுள்ள ஸ்காப்புரோவில் வாழ்ந்துவரும் அமலதாஸ் மரியதாசன், ஜூடின் பாசில் தம்பதியரின் மகன் டானியல் அமலதாஸ். அமலதாஸ் மரியதாசன், ஜூடின் பாசில் தம்பதியர், 1993ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்தவர்கள் ஆவர்.

தம்பதியருக்கு கனடாவில் பிறந்த மகன் டானியல் அமலதாஸ். கடந்த வியாழக்கிழமை, அதாவது, ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி, 2.00 மணியளவில், ஸ்காப்புரோ டவுன் சென்டரிலுள்ள ஷாப்பிங் மாலுக்கு எதிரே பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்திருக்கிறார்கள் அமலதாஸ் ஜூடின் தம்பதியர். அப்போது திடீரென பொலிசாரும் மருத்துவ உதவிக்குழுவினரும் அங்கு விரைய, யாருக்கோ ஏதோ பிரச்சினை என்பதை அறிந்துள்ளார்கள் அமலதாஸ் ஜூடின் தம்பதியர். ஆனால், அவர்களுக்குத் தெரியாது, அங்கு சுட்டுக்கொல்லப்பட்டது தங்கள் மகன் டானியல் என்பது.

பின்னர் அவர்கள் வீடு திரும்பிய நிலையில், மகனைக் காணாமல் அவனை மொபைலில் அழைக்க, மகனை தொடர்புகொள்ள முடியவில்லை. டானியல் வீடு திரும்பவேயில்லை. மாறாக, வீட்டுக்கு பொலிசார்தான் வந்துள்ளார்கள்.

பொலிசார் துப்பாக்கிச்சூடு குறித்து கூறியபோதுதான் ஷாப்பிங் மாலில் தங்கள் மகன் கொல்லப்பட்டது குறித்து அவர்களுக்குத் தெரியவந்துள்ளது. மகனை இழந்து கண்ணீர் விட்டுக் கதறிக்கொண்டிருக்கும் பெற்றோருக்கு ஆறுதல் கூற வார்த்தைகள் இல்லை.

தங்கள் மகனுக்கு எதனால் இப்படி நடந்தது என்று தங்களுக்குத் தெரியவில்லை என்று கூறும் அமலதாஸ் ஜூடின் தம்பதியர் கண்ணீர் விட்டுக் கதறிக்கொண்டிருக்கிறார்கள்.

ஏழு நாட்களாக தூங்கவேயில்லை என்று ஜூடின் கூற, கணவனுக்கும் மனைவிக்கும் கண்களில் கண்ணீர் கொப்புளிக்கிறது.

கனடா பாதுகாப்பான நாடு, எங்கள் பிள்ளைகள் இங்கு பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று நினைத்தோம் என்கிறார் ஜூடின். மகனை இழந்து கதறும் அவர்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தையில்லை.

  • 384
  • More
Comments (0)
Login or Join to comment.