·   ·  584 news
  •  ·  0 friends

அலர்ட் ரெடி சோதனை - நவம்பர் 18

கனடாவின் தேசிய அவசர எச்சரிக்கை அமைப்பான அலர்ட் ரெடி, நவம்பர் 18 புதன்கிழமை நாடு முழுவதும் சோதனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தச் சோதனை தொலைக்காட்சி, வானொலி மற்றும் கைபேசிகளில் வரும். இது வெறும் சோதனை மட்டுமே, யாரும் எதுவும் செய்ய வேண்டாம் என்று கூறப்பட்டது.

ஒண்டாரியோவில் மதியம் 12.55 மணிக்கு இந்தச் சோதனை நடக்கும். மற்ற மாகாணங்களில் அந்தந்த நேரத்திற்கு ஏற்ப நடக்கும். உண்மையான ஆபத்து நேரத்தில் இந்த அமைப்பு சரியாக வேலை செய்கிறதா என்று பார்க்கவே இந்தச் சோதனை செய்யப்படுகிறது.

  • 29
  • More
Comments (0)
Login or Join to comment.