·   ·  395 news
  •  ·  0 friends

பெண் ஒருவரை நாய்கள் கடித்துக் குதறிய சம்பவம்

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள போர்ட் மூடி பகுதியில், பெண் ஒருவரை இரண்டு பெரிய நாய்கள் கடித்துக் குதறிய சம்பவத்தையடுத்து, அந்த நாய்களின் உரிமையாளர் மீது குற்றவியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மெட்ரோ வான்கூவர் பகுதியில் உள்ள அந்த நகரத்தில், கடந்த மே 20 ஆம் திகதி பெண் ஒருவர் நாய்களால் கடுமையாகத் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

காயமடைந்த பெண் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டார். அவரது காயங்களின் முழு விவரங்கள் வெளியிடப்படவில்லை என்றாலும், அவை மிகவும் "கடுமையானவை மற்றும் வாழ்க்கையையே மாற்றியமைக்கக்கூடியவை" என்று விவரிக்கப்பட்டுள்ளன.

தாக்குதலுக்கு முன்பே, அந்த நாய்கள் மிகவும் "ஆக்ரோஷமானவை" என நகர அதிகாரிகள் ஏற்கனவே வகைப்படுத்தியிருந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதன்படி, அந்த நாய்களுக்கு வாய்மூடி கட்டாயமாக்கப்பட்டிருந்த போதிலும், இச்சம்பவத்தின் போது நாய்களுக்கு வாய்மூடி அணிவிக்கப்பட்டிருக்கவில்லை என பொலிஸார் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனையடுத்து, கவனக்குறைவாகச் செயல்பட்டு உடல்காயத்தை ஏற்படுத்தியதற்காக நாய் உரிமையாளர் மீது குற்றச்சாட்டைப் பதிவு செய்ய பிரிட்டிஷ் கொலம்பியா அரசு வழக்குரைஞர் சேவை ஒப்புதல் அளித்துள்ளது.

  • 322
  • More
Comments (0)
Login or Join to comment.