கனடா - ஐரோப்பிய ஒன்றியக் கூட்டணி
கனடாவும் ஐரோப்பிய ஒன்றியமும் எதிர்காலக் கூட்டணி என்ற புதிய கூட்டணியைத் தொடங்கியுள்ளன. பிரதமர் மார்க் கார்னி, மாண்ட்ரியலில் நடந்த உச்சி மாநாட்டில் எண்ம வணிக ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டார். இதன் மூலம் கனடா, அந்தக் கூட்டணியின் முதல் இணை உறுப்பினராக மாறும் வாய்ப்பு உள்ளது.
இந்தக் கூட்டணி, பாதுகாப்பு, முக்கிய கனிமங்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் மாணவர் பரிமாற்றம் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கும். உலக நிலைமை மோசமாகி வரும் நேரத்தில், அமெரிக்காவை மட்டும் நம்பாமல், ஐரோப்பாவுடன் நெருக்கமாக இருக்க கனடா விரும்புகிறது என்று கூறப்படுகிறது.