·   ·  374 news
  •  ·  0 friends

இளம்பெண்ணை கொன்றுவிட்டு தப்பியோடியவர் பொலிசாரால் கைது

கனடாவில், இந்திய இளம்பெண்ணொருவரை சுட்டுக்கொன்ற நபர் ஒருவர் தப்பியோடிய நிலையில், மோப்ப நாய்கள், ட்ரோன்கள் உதவியுடன் பெரும் எண்ணிக்கையிலான பொலிசார் அதிரடியாக அவரைக் கைது செய்துள்ளார்கள்.

வெள்ளிக்கிழமை காலை 7.23 மணியளவில், கனடாவின் ரொரன்றோவில், நவ்நீத் கௌர் (26) என்னும் இளம்பெண் நடந்து சென்று கொண்டிருந்திருக்கிறார்.

கௌரை பின் தொடர்ந்த ஒருவர், திடீரென அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

தகவலறிந்த பொலிசார், மோப்ப நாய்கள், ட்ரோன்கள் உதவியுடன் அதிரடியாக அவரைக் கைது செய்துள்ளார்கள்.

கைது செய்யப்பட்ட நபரின் பெயர் ஷரன்ஜீத் சிங் (37) என்றும் அவர் பிராம்டனைச் சேர்ந்தவர் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

அவர் ஏற்கனவே கௌருக்கு அறிமுகமானவரா, எதனால் கௌரை அவர் சுட்டார் என்பது போன்ற விவரங்கள் வெளியாகவில்லை.

சிங் மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

  • 48
  • More
Comments (0)
Login or Join to comment.