இந்திய மாணவர்களை நிராகரிக்கும் கனடா
கனடாவில் உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக இந்திய மாணவர்கள் சமர்ப்பித்த கல்வி அனுமதி (Study Permit) விண்ணப்பங்களில், 74 சதவீதம் ஓகஸ்ட் மாதம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக 'ரொய்ட்டர்ஸ்' தெரிவித்துள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் பதிவான 32% நிராகரிப்பு வீதத்துடன் ஒப்பிடுகையில், இது குறிப்பிடத்தக்க அதிகரிப்பாகும்.
கல்வி அனுமதிக்கு விண்ணப்பித்த இந்திய மாணவர்களின் எண்ணிக்கையும் 2023 ஓகஸ்ட்டில் இருந்த 20,900 இலிருந்து, 2025 ஓகஸ்ட்டில் 4,515 ஆகக் கணிசமாகக் குறைந்துள்ளது.
மோசடிமிக்க கல்வி அனுமதிகளை தடுப்பதற்காக கனடா அரசாங்கம் மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைகளே அதிகப்படியான நிராகரிப்புகளுக்கு முக்கியக் காரணமாக என கூறப்படுகிறது.