புதிய பட்ஜெட் - நமது விதியின் எஜமானர்கள்
கனடா அரசு 2026 ஆம் ஆண்டுக்கான புதிய பட்ஜெட்டை வெளியிட்டுள்ளது. இந்த பட்ஜெட்டுக்கு நமது விதியின் எஜமானர்கள் என்று பெயரிடப்பட்டுள்ளது. வாழ்க்கை செலவை குறைப்பது, பொருளாதார சுதந்திரத்தை வலுப்படுத்துவது ஆகியவை முக்கிய நோக்கங்களாகும்.
இந்த பட்ஜெட்டில் 62.3 பில்லியன் கனடா டாலர் பற்றாக்குறை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் 142.1 பில்லியன் டாலர் புதிய செலவு மற்றும் வரி நடவடிக்கைகள் முன்மொழியப்பட்டுள்ளன. உள்கட்டமைப்பு, வணிக வளர்ச்சி, குடும்ப செலவு குறைப்பு ஆகியவற்றில் முக்கிய முதலீடுகள் செய்யப்படும்.
மேலும் கனடாவின் முதல் தேசிய இறையாண்மை நிதியாக 25 பில்லியன் டாலர் மதிப்பில் ஒரு நிதி உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது பலவீனமான உற்பத்தி வளர்ச்சி மற்றும் தனியார் துறை முதலீடு குறைவை சரி செய்யும் என நம்பப்படுகிறது.