·   ·  179 news
  •  ·  0 friends

பண்டிகை காலத்தில் கனடியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பண்டிகை காலத்தில் கனடியர்களுக்கு மோசடிகள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கனடியர்கள் மோசடிகளால் நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்களை இழந்து வருகின்றனர்.

ஆனால், விடுமுறை காலங்களில் மக்கள் அவசரம், கவனச்சிதறல் மற்றும் பாதிப்பு நிலை காரணமாக இருப்பதால், இந்த குற்றங்கள் மேலும் அதிகரிப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கொள்வனவர்கள் கவனம் தளர்ந்த நேரத்தை மோசடியாளர்கள் குறிவைப்பதாக சைபர் பாதுகாப்பு நிபுணரான டெரி கட்லர் தெரிவிக்கின்றார்.

மக்கள் வேகமாக வேலைகளை முடிக்க விரும்புகிறார்கள். அதனால், கிளிக் செய்யக்கூடாத இணைப்புகளை கிளிக் செய்து மோசடியில் சிக்குகிறார்கள்,” என அவர் தெரிவித்தார்.

சலுகைகளை நாடும் வாடிக்கையாளர்களை ஈர்க்க போலி இணையதளங்களை உருவாக்குவதுடன், கிப்ட் கார்டுகளையும் மோசடியாளர்கள் கையாள்வதாக கட்லர் கூறினார்.

“அசல் பார்கோடு மீது ஸ்டிக்கர் அல்லது வேறு பார்கோடை ஒட்டிவிடுவார்கள். அது மோசடியாளர்கள் முன்கூட்டியே வாங்கிய ‘மாஸ்டர்’ கிப்ட் கார்டுடன் இணைக்கப்பட்டிருக்கும். நீங்கள் காசாளரிடம் 50 டொலர்கள் ஏற்றும்போது, அந்த தொகை உடனடியாக மோசடியாளர்களின் கார்டுக்கு மாற்றப்பட்டு காலியாக்கப்படும்,” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  • 100
  • More
Comments (0)
Login or Join to comment.