·   ·  197 news
  •  ·  0 friends

கனடாவில் இடம்பெற்ற விபத்தில் 5 வயது சிறுமி உயிரிழப்பு

கனடாவின் எட்ம;ண்டன் நகரத்தின் வடக்கே உள்ள நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு நடந்த விபத்தில் 5 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். மேலும் மூவர் காயமடைந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கனடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பீவர் ரிவர் பாலம் அருகே ஹைவே 897-ல், ஃபோர்டு F-350 வாகனமும் ஒரு மினிவேனும் மோதிக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.அந்த மினிவேனில் 5 வயது சிறுமி, 10 மாத குழந்தை, 27 வயதான தாய் மற்றும் 30 வயதான ஆண் ஒருவர் பயணம் செய்திருந்தனர்

இந்த விபத்தில் மூவரும் பல்வேறு காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், 5 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கனடிய பொலிஸார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் மேற்கொண்ட விசாரணையில், விபத்தில் ஈடுபட்ட ஃபோர்டு F-350 வாகனம், மூன்று நாட்களுக்கு முன்பு சாஸ்காட்சுவானின் லாஷ்பர்ன் பகுதியில் திருடப்பட்டதாகவும், விபத்துக்குப் பிறகு அதன் ஓட்டுநர் சம்பவ இடத்தை விட்டு தப்பிச் சென்றதாகவும் தெரியவந்தது.

காயமடைந்த குடும்பத்துக்கு உதவுவதற்காக நின்றிருந்த ஒருவரின் காரையும் அந்த நபர் திருடிச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.அந்த திருடப்பட்ட வாகனம் ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டாலும், அதுவும் கைவிடப்பட்ட நிலையில் இருந்தது. இதையடுத்து, அடிக்கடி குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் வசிக்கும் இடங்களில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

  • 55
  • More
Comments (0)
Login or Join to comment.